2026: தீபாவளிக்கு பிறகு வரும் செவ்வாய் பெயர்ச்சி.. யாருக்கு டாப் யோகம் காத்திருக்கிறது

By Sakthi Raj Oct 28, 2026 06:36 AM GMT
Report

ஜோதிட ரீதியாக செவ்வாய் கிரகம் தான் ஒரு மனிதனுக்கு தைரியம், வலிமை, தொழிலில் முன்னேற்றம் வீடு நிலம் போன்றவற்றிக்கு காரணியாக உள்ளார். அவர் தற்போது நீச நிலையில் சஞ்சாரம் செய்து வருகிறார்.

இவர் தீபாவளி முடிந்த பின்னர் நவம்பர் 12ஆம் தேதி கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு 8.20 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

செவ்வாய் பகவான் அவருடைய நட்பு ராசியாக இருக்கக்கூடிய சிம்மத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது ஒரு சில ராசிகளுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி பொருளாதார முன்னேற்றம் கிடைக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.   

2026: தீபாவளிக்கு பிறகு வரும் செவ்வாய் பெயர்ச்சி.. யாருக்கு டாப் யோகம் காத்திருக்கிறது | 2026 Diwali Mars Transit Astrology Prediction

12 ராசிகளும் அவர்கள் வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா?

12 ராசிகளும் அவர்கள் வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா?

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு தைரிய ஸ்தானத்தில் செவ்வாய் பெயர்ச்சி நடக்கிறது. ஆதலால், இவர்களுக்கு தொழில் ரீதியாக முயற்சிகள் கைக்கூடும். புதிய திட்டங்கள் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

புதிய ஒப்பந்தங்கள் பெறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியாக புதிய நபர்களுடைய அறிமுகத்தை பெறுவீர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் நகர்வதால் இவர்களுக்கு இந்த காலகட்டம் பணம் தொடர்பான விஷயங்களில் நிறைய வாய்ப்புகள் உருவாக போகிறது. வருமானம் உயர்த்துவதை பற்றிய ஆலோசனையையும் அதற்கான வேலையும் உங்களுக்கு வந்து சேரும்.

தொழில் செய்பவர்களுக்கு கடின உழைப்பு மற்றும் புதிய திட்டங்கள் வழியாக புதிய வாடிக்கையாளர்களை பெறுவீர்கள். முயற்சிகள் கைகூடிவரும்.

12 ராசிகளும் அவர்கள் வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா?

12 ராசிகளும் அவர்கள் வாழ்க்கையில் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறு என்ன தெரியுமா?

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானுடைய இந்த பார்வை பல்வேறு விதங்களில் நன்மையை கொடுக்கப் போகிறது. பொருளாதார விவகாரங்களில் நல்ல தாக்கத்தை பெறுவீர்கள். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

தேவையில்லாத செயல்களை செய்யும் பொழுது அதிக கவனம் செலுத்த வேண்டும். தொழில் தொடர்பான முதலீடுகளில் நிதானமாக முடிவு எடுக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.      

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US