2026-ல் மிதுனத்தில் நடக்கும் கஜ கேசரி யோகம்- 3 ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்
ஜோதிடத்தில் கஜகேசரி யோகம் என்பது மிகவும் ஒரு மங்களகரமான யோகமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது கஜம் என்றால் யானையையும், கேசரி என்றால் சிங்கத்தை குறிப்பிடுகிறது.
இந்த யோகம் ஜாதகத்தில் அமைய பெற்றிருந்தால் அந்த நபர் அரசனைப் போல் மிகவும் கம்பீரமாகவும் எடுத்த காரியங்களில் வெற்றி அடைந்து வாழக்கூடியவராக இருப்பார். அப்படியாக 2026 ஆம் புத்தாண்டு தொடங்க இருக்க நிலையில் புத்தாண்டு தொடக்கத்திலே இந்த மங்களகரமான யோகம் நிகழ்கிறது.
அதாவது ஜோதிட ரீதியாக ஜனவரி 2026-ம் தேதி அன்று குரு மற்றும் சந்திரன் சேர்க்கை ஏற்பட்டு இந்த கஜகேசரி யோகத்தை உருவாக்க உள்ளது. ஆக, இந்த யோகத்தால் 3 ராசிகளுக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டமான வாழ்க்கை காத்திருக்கிறதாம். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இந்த கஜகேசரி யோகமானது அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல சுபத்துவமான நிகழ்வுகளை கொடுக்கப் போகிறது. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு குறைபாடுகள் இருந்தால் அதில் இருந்து விடுபடுவார்கள். அலுவலகத்தில் இவர்களுக்கு புதிய பொறுப்புகளை தேடி வரக்கூடும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் மரியாதைகளையும் பெற்று வருமானத்தை இரட்டி பார்க்க போகிறார்கள்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இந்த கஜகேசரி யோகமானது ஒரு மிகச்சிறந்த நன்மையை கொடுக்கப் போகிறது. தொழில் ரீதியாக ஒரு சில குழப்பங்களும் வருத்தங்களும் இருந்தால் அவை விலகி தொழில் ரீதியாக முழு கவனத்தை இவர்கள் செலுத்த போகிறார்கள். இந்த காலகட்டங்களில் இவருடைய பேச்சுத் திறமை மிகச் சிறப்பாக அமைந்து இவர்களுடைய கருத்துக்களுக்கு மரியாதை கிடைக்கப் போகிறது வாழ்க்கை ரீதியாக மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த கஜகேசரி யோகமானது அவர்களுக்கு தொழில் ரீதியாக ஒரு நல்ல நிதானத்தையும் பொறுமையையும் கொடுத்து ஒரு வெற்றி நிலைக்கு எடுத்துச் செல்ல போகிறது. தொழில் தொடங்க வேண்டும் என்று வங்கிகளில் பணம் கேட்டிருப்பவர்களுக்கு நிச்சயம் அந்த பணம் கைகளுக்கு வரும். குடும்பத்தினர் உங்களுடைய அன்பை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். ஒரு சிலருக்கு பதவி கௌரவம் செல்வாக்கு மிக சிறந்த நிலைக்கு போகிறோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |