2026: குரு கேது சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள யோகம்.. 12 ராசிகளுக்கும் எப்படி உள்ளது?

Report

வேத ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக இருக்கிறார். இவர்தான் அறிவு, செல்வம், குழந்தை பாக்கிய,ம் ஆன்மீக ஆகியவற்றிக்கு காரணியாக இருக்கக்கூடியவர்கள்.

அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி குரு பகவான் தன்னுடைய நட்பு கிரகமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு ஏற்கனவே கேது பகவான் இருக்கிறார். தற்போது குரு கேது சேர்க்கை உருவாக இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் எதிர் புறத்தில் ராகு இருப்பதால் குரு சண்டாள யோகத்தின் தாக்கம் கட்டாயமாக 12 ராசிகளுக்கு இருக்கும். இதனை அடுத்து நவம்பர் 12ஆம் தேதி செவ்வாய் பகவானும் சிம்ம ராசியில் நுழைகிறார். இதனால் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.  

2026: குரு கேது சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள யோகம்.. 12 ராசிகளுக்கும் எப்படி உள்ளது? | 2026 Guru Chandala Yoga Predictions For 12 Zodiac

2027-ல் இயற்கை சீற்றத்தால் வர இருக்கும் ஆபத்து.. பஞ்சாங்கம் சொல்வது என்ன?

2027-ல் இயற்கை சீற்றத்தால் வர இருக்கும் ஆபத்து.. பஞ்சாங்கம் சொல்வது என்ன?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் வந்தாலும் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரலாம். தொழில்நுட்பம் சார்ந்த வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் தேடி வரும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் தேவை. புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடி வரும். வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை திட்டமிட்டு செய்தால் நன்மை கொடுக்கும்.

மிதுனம்:

தனிப்பட்ட உறவுகளில் சில சவால்களை சந்திக்கலாம். நெருங்கியவர்களிடம் பேசும் பொழுது கருத்து வேறுபாடுகள் உருவாக வாய்ப்பு உள்ளது. ஒரே நேரத்தில் பல வேலைகளில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.

கடகம்:

பணத்தை சேமிப்பதில் சில சிக்கல்களை சந்திக்கலாம். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். சில நேரங்களில் மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பணம் தொடர்பான விஷயங்களில் அவசரம் வேண்டாம்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு கேது இணைந்து இவர்களுக்கு மனநிலை உடல்நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் உண்டு செய்யலாம். வேலையில் இருப்பவர்களுக்கு வேலை மாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

கன்னி:

எதிர்பாராத மருத்துவம் மற்றும் குடும்ப தேவைகள் காரணமாக சில பணம் செலவாகலாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டமாகும். கவன சிதறல் மற்றும் அலட்சியத்தால் கல்வியில் மந்த நிலை உண்டாகலாம்.

துலாம்:

தொழில் ரீதியாக உங்களுக்கு எடுக்கும் முயற்சியில் சாதகமாக அமையப் போகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் புரிதலும் உண்டாகும். ஆடம்பர பொருட்களுக்கான செலவுகள் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தி கொள்வது அவசியம். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

திருப்பதியில் நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

திருப்பதியில் நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

விருச்சிகம்:

இவர்களுக்கு தற்பொழுது வேலை தொடர்பான புதிய விஷயங்கள் தேடி வரலாம். தொழில் தொடர்பான முடிவுகளை எடுக்கும் பொழுது நீண்ட கால நன்மை கொடுக்கக்கூடிய விஷயங்களை மனதில் வைத்து முடிவெடுப்பது அவசியம்.

தனுசு:

அவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கக்கூடிய வாய்ப்பாக இருக்கிறது. சமுதாயத்தில் பெயரும் மதிப்பும் உயரும். அரசியலில் இருப்பவர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் தேடி வர போகிறது. பணவரவு அதிகரிக்கும்.

மகரம்:

உடல்நலம் மற்றும் பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வாகனங்களில் பயணம் செல்லும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

கும்பம்:

இந்த காலகட்டம் குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகளை சந்திக்க கூடிய நிலை வரும். கணவன் மனைவி இடையே புரிதல் குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு கடன் வேலை கடன் எதிரிகள் உடல்நலம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். திடீர் செலவுகள் காரணமாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடல் நலனில் சிறு சிறு தொந்தரவு வந்து செல்லும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US