2026: துலாம் ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்க போகிறது?
ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம் குரு பகவான் தான் ஒரு மனிதனுக்கு பெயர், புகழ், செல்வாக்கு போன்றவற்றை கொடுக்க கூடியவராக இருக்கிறார். குரு பகவான் ஒருவர் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமர்ந்து விட்டால் அந்த ஜாதகருக்கு எதைப் பற்றியும் கவலை வேண்டாம் எல்லா வகையிலும் அவர்களுக்கு சிறப்பை கொடுக்கக்கூடியதாக இந்த குரு பகவான் செயல்படுவார்.
2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குரு பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இது ஒரு முக்கிய பெயர்ச்சியாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது. அப்படியாக ஏழாவது ராசியாக இருக்கக்கூடிய துலாம் ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

துலாம் ராசியினர் குரு பெயர்ச்சியை முன்னிட்டு அதிக அளவிலான வேலையில் ஈடுபாடு செலுத்தப் போகிறீர்கள். ஒரு சிலருக்கு மிகப்பெரிய அளவில் உயர் பதவிகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. இந்த காலகட்டங்களில் துலாம் ராசிக்கு பொறுப்பு பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
அதிகாரமிக்க இடத்தில் அமரக்கூடிய வாய்ப்பை குரு பகவான் இந்த காலகட்டங்களில் கொடுக்கப் போகிறார். மேலும், துலாம் ராசியினருடைய குழந்தைகள் வாழ்வில் ஒரு மிகச் சிறந்த பலனை கொடுக்கப் போகிறது. குழந்தைகள் படிப்பிற்காக நினைத்து இடத்தில் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கப்போகிறது.
குரு பகவான் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் இவர்களுக்கு நிறைய இடத்தில் இருந்து பணம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சியை குரு பகவான் கொடுக்கப் போகிறார். குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலையும் அமைதியும் உருவாக போகிறது.
நீண்ட நாட்களாக ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருப்பவர்களுக்கு அந்த பிரச்சனை படிப்படியாக விலகி நல்ல ஆரோக்கியமான உடல் நிலையை பெறப் போகிறீர்கள். உங்களை நீண்ட நாட்கள் ஒருவர் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறார் என்றால் அவர்கள் இடம் தெரியாமல் விலகிச் செல்வார்கள்.

வேலை ரீதியாக இவர்கள் கவலை கொள்ள தேவையில்லை. ஒரு சிலருக்கு நீதிபதியாக கூடிய வாய்ப்புகளை இந்த குரு பகவான் வழக்கப் போகிறார். சமுதாயத்தில் உயர் அந்தஸ்தில் இருக்கக்கூடியவர்களின் நட்புகளை பெறுவீர்கள்.
இருப்பினும், துலாம் ராசியினர் மூட்டு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆதலால் அதில் மற்றும் சற்று கவனம் செலுத்தினால் போதுமானது. துலாம் ராசியினர் குரு பெயர்ச்சியை முன்னிட்டு மகிழ்ச்சியை சற்று தள்ளி வைத்து பணம் சம்பாதிப்பதற்கான வேலையில் இறங்கிவிட்டால் மிகச் சிறந்த காலம் ஆக அமையும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |