2026 குரு பெயர்ச்சி? ஹம்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெரும் ராசிகள்
குரு பகவானின் கடக ராசி பெயர்ச்சி ஜூன் இரண்டாம் தேதி நடக்க இருக்கிறது. ஜோதிட ரீதியாக இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. காரணம் குரு பகவான் கடக ராசியில் உச்சம் அடைகிறார். கடக ராசியில் குரு பகவான் பெயர்ச்சி நடப்பதால் ஹம்ச ராஜ யோகத்தை இந்த குரு இடமாற்றம் நிகழ்த்துகிறது.
மேலும், இந்த யோகமானது "பஞ்ச மகா புருஷ ராஜ யோகங்கள்" என்கின்ற ஐந்து சிறந்த மனித யோகங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு கடக ராசியில் குருவின் சஞ்சாரம் அக்டோபர் 31ஆம் தேதி வரை நடைபெறும்.
அதாவது ஜூன் 2 முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை குரு பகவான் அவரின் உச்ச ராசியான கடக ராசியில் இருப்பார். இதன் விளைவாக சில ராசிகள் மிகப் பெரிய அளவில் யோகத்தைப் பெறப் போகிறார்கள். அவர்கள் யார் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் இந்த கடக ராசி பெயர்ச்சி இவர்களுக்கு மிகவும் சுபமான பலன்களை கொடுக்கப்போகிறது. சமுதாயத்தில் இழந்த மதிப்பையும் அந்தஸ்தையும் இவர்கள் பெறப் போகிறார்கள். உயர் பதவியில் இருப்பவர்களுடன் நல்ல சுமுகமான சூழ்நிலை உருவாகும். பொருளாதார ரீதியாக முன்னேற்றமும் இழந்த செல்வத்தை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் இந்த பெயர்ச்சியானது இவர்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல வலுவான நிலையை கொடுக்கப் போகிறது. வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்களில் இருந்து விடுபட போகிறீர்கள். வருமானத்தை உயர்த்துவதற்கான எல்லா வேலையும் உங்களுக்கு கைகூடி வரும். புதிய தொடக்கங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் இந்த கடக ராசி பெயர்சியானது இவர்களுக்கு மங்களகரமான மற்றும் சிறந்த பலன்களை கொடுக்கப் போகிறது. நிலம், வீடு, சொத்து, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உருவாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமும் கல்வியில் ஏற்பட்ட தடையும் விலகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த உயர் பதவிகள் உங்களைத் தேடி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |