2026 குரு பெயர்ச்சி 12 ராசிகள் செல்ல வேண்டிய குரு பரிகார ஆலயங்கள்
ஒருவருடைய வாழ்க்கையில் குரு பகவானுடைய பார்வை பட்டு விட்டால் அவர் எவ்வளவு பெரிய மோசமான நிலையில் இருந்தாலும் அவர்கள் மிகப்பெரிய உயரத்தை அடைந்து விடலாம். அந்த வகையில் மே 26ம் தேதி குரு பகவானுடைய இடமாற்றம் நடக்கிறது.
குரு பகவான் அவருடைய உச்ச ராசியான கடக ராசிக்கு இடம் மாறுகிறார். இதனால் 12 ராசிகளுக்கு பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் குரு பெயர்ச்சி முன்னிட்டு 12 ராசிகளும் செல்ல வேண்டிய ஆலயங்களை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் (ஆலங்குடி) இது மிகவும் முக்கியமான நவக்கிரக குரு தலம் ஆகும். ஆதலால் இவர்கள் இங்கு செல்லும் பொழுது தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.
ரிஷபம்:
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் (திட்டை)இக்கோவிலில் குரு பகவான் சுவாமிக்கும் அம்பாளுக்கும்நடுவே "ராஜ குருவாக" நின்ற கோலத்தில் வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும். இங்கு சென்று இவர்கள் வழிபாடு செய்யும் பொழுது பொருளாதாரம் மேம்படும்.
மிதுனம்:
அருள்மிகு பள்ளிகொண்டேஸ்வரர் திருக்கோவில் (சுருட்டப்பள்ளி). இக்கோவிலில் சிவபெருமான் நஞ்சை உண்டு அன்னை பார்வதி தேவியின் மடியில் தலைவைத்து பள்ளிகொண்ட (தூங்கும்) கோலத்தில் காட்சியளிக்கும் உலகின் ஒரே சிவாலயம் ஆகும்.
அதேபோல் இங்குள்ள தட்சிணாமூர்த்தி அவரின் மனைவியான தாரா தேவியுடன் காட்சி கொடுக்கிறார். ஆக, இவர்கள் இங்கு சென்று வழிபாடு செய்தால் தம்பதிகள் ஒற்றுமை சிறக்கும்.

கடகம்:
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் (திருச்செந்தூர்). சூரசம்ஹாரத்திற்கு முன்பாக, தேவர்களின் குருவான பிரகஸ்பதி (குரு பகவான்) முருகப் பெருமானுக்கு அசுரர்களின் வரலாற்றை உபதேசம் செய்த புனித தலம் ஆகும். எனவே இது முதன்மை குரு ஸ்தலமாகக் கருதப்படுகிறது. இங்கு சென்று வழிபாடு செய்தால் உயர் பதவி, எதிரிகளை வீழ்த்தும் ஆற்றல் ஆகியவை கிடைக்கும்.
சிம்மம்:
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் (திருப்புலிவனம்). இங்கு சென்று வழிபாடு செய்யும் பொழுது தொழிலில் நஷ்டம் விலகும், ஆளுமை திறன் மேம்படும்.
கன்னி:
அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் (குருவித்துறை). இங்கு சென்று இவர்கள் வழிபாடு செய்யும் பொழுது புத்திர பாக்கியம் கிடைக்கும். கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம்.
துலாம்:
அருள்மிகு அனுக்ரஹ தட்சிணாமூர்த்தி கோவில் (பட்டமங்கலம்). இங்கு சென்று இவர்கள் வழிபாடு செய்யும் பொழுது பண நெருக்கடிகள் விலகும். சொத்து சேர்க்கை மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும்.
விருச்சிகம்:
அருள்மிகு திருவல்லீசுவரர் திருக்கோவில் (பாடி. சென்னை). இங்கு சென்று இவர்கள் வழிபாடு செய்யும் பொழுது தீராத நோய் மற்றும், உடல் உபாதைகள் மன அழுத்தம் விலகும்.
தனுசு:
அருள்மிகு சிவசைலநாதர் திருக்கோவில் (சிவசைலம்). இவர்கள் இங்கு சென்று வழிபாடு செய்யும் பொழுது மன குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.
மகரம்:
அருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோவில் (தக்கோலம்). இவர்கள் இங்கு சென்று வழிபாடு செய்யும் பொழுது குருபகவானின் அருளால் குழப்பங்கள், தடை, கஷ்டம் எல்லாம் விலகும்.
கும்பம்:
அருள்மிகு வள்ளலார் திருக்கோவில் (மேலமயூரநாதர், உத்திரமாயூரம்). இவர்கள் இங்கு சென்று வழிபாடு செய்யும் பொழுது கடன் கஷ்டம், எதிரிகள் தொல்லை, வீண் அலைச்சல் ஆகியவை குறையும்.
மீனம்:
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் (மயிலாப்பூர்). இவர்கள் இங்கு சென்று வழிபாடு செய்யும் பொழுது பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் விலகும், நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |