வாஸ்து: வீடு, மனை வாங்கும் பொழுது கட்டாயம் இவை எல்லாம் கவனிக்க வேண்டுமாம்
நாம் வசிக்கும் இடம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் மட்டுமே அங்கு நாம் நிம்மதியாக இருக்க முடியும். பிரச்சினை என்பது மனிதர்களிடையே உருவாகுவது மட்டுமல்ல அங்கு வாஸ்து ரீதியாகவும் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
அப்படியாக, ஒருவர் நிலம், மனை வாங்க செல்லும் பொழுது அவர்கள் சகுனம் பார்த்து செல்வது என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது. அதாவது நிலம் அல்லது வீடு வாங்க செல்லும் பொழுது எதிரே நிறைகுடம் ஏந்திய பெண் வருவது, பூனை யானை வருகிறதா என்பதை எல்லாம் பார்க்க வேண்டிய அவசியமாக உள்ளது.
அதை விட முக்கியமாக மனை வாங்கும் பொழுது ஆயாதி பொருத்தம் பார்ப்பது அவசியம். இது அந்த பூமியில் கிடைக்கக்கூடிய லாப நஷ்டங்களை நமக்கு வெளிப்படையாக எடுத்துக்காட்டுகிறது. அதேபோல், வீட்டிற்கு முன்பாக குறைந்தது நான்கு படிகள் இருக்க வேண்டும்.
மிக முக்கியமாக வீடு கட்டுவதற்கு முன்பாக வாஸ்து பூஜை செய்வது மிக மிக அவசியமாக உள்ளது. மண்ணைத் தோண்டி அதன் தன்மையை சரி பார்ப்பதும், பசுவை வீட்டிற்குள் அழைத்து வருவதும் தோஷங்களை நமக்கு முழுமையாக போக்கச் செய்யு.
மேலும், ஒருவர் வீடு மனை நிலம் வாங்கும் பொழுது வாஸ்து ரீதியாக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னவென்று இந்த காணொளியில் பார்த்தது தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |