2026 குரு பெயர்ச்சி: 12 ராசிகளுக்கும் எப்படி இருக்க போகிறது?
ஜோதிடத்தில் குரு பகவான் தான் ஒரு மனிதனுடைய மரியாதை அவருடைய பொருளாதாரம், புகழ் போன்ற எல்லாவற்றையும் கொடுக்கக்கூடிய சுப கிரகமாக இருந்து வருகிறார். அதனால் ஒவ்வொரு வருடமும் நடக்கும் குரு பெயர்ச்சி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவரின் இந்த பெயர்ச்சி கட்டாயம் 12 ராசிகளுக்கும் மிக சிறந்த மாற்றத்தை கொடுக்கும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி அன்று காலை 6:30 மணி அளவில் குரு பகவான் அவருடைய உச்ச ராசியான கடக ராசிக்கு செல்கிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு மிகச்சிறந்த மாற்றமும் எதிர்பாராத ஒரு அதிர்ஷ்டமான திருப்புமுனையும் பெறப்போகிறார்கள்.
அப்படியாக குருபகவானுடைய இந்த கடக ராசி பெயர்சியானது 12 ராசிகளுக்கும் அதனுடைய தாக்கத்தை கொடுத்து விடும். இதனால் ஒரு சிலருக்கு நன்மையும் தீமை கலந்த பலனை பெறுவார்கள். ஆக, குரு பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் என்ன பலன் கொடுக்க போகிறார் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்கு குரு பெயர்ச்சி தொழில் ரீதியாக ஒரு சில குழப்பங்களைக் கொடுத்து பிறகு ஒரு நிதானத்தை இவர்கள் பெறப் போகிறார்கள். இருப்பினும் மனதில் குழப்பம் சூழ்வதால் முக்கியமான முடிவுகளை இவர்கள் எடுக்க கூடிய நிலை உருவாகும். அது இவர்களுக்கு அதிர்ஷ்டமாக மாறப்போகிறது.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இந்த குரு பெயர்ச்சியானது ஒரு நல்ல மன மாற்றத்தை இவர்கள் குடும்ப வாழ்க்கையில் கொடுக்கப் போகிறது. அதாவது சண்டை குழப்பங்கள் என்று இருந்த விஷயங்கள் எல்லாம் இவர்களுக்கு விலக காத்திருக்கிறது. சந்தோஷமாக இருக்கக்கூடிய மனநிலை இவர்களுக்கு வரப்போவதால் வருகின்ற வாய்ப்புகளை சாதாரணமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு குருபகவான் உடைய இந்த பெயர்ச்சியானது எந்த ஒரு மாற்றம் முன்னேற்றம் என்ற ஒரு பெரிய அளவில் வரவில்லை என்றாலும் இருப்பதை தக்க வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான நிலையை கொடுக்கப் போகிறார். குறிப்பிட்ட சில காலங்கள் வரை நீங்கள் எந்த ஒரு குழப்பங்களும் இல்லாமல் நிதானமாக எல்லா விஷயங்களும் செய்து சாதித்துக் கொள்ளலாம்.
கடகம்:
கடக ராசியினருக்கு குரு பகவானுடைய இந்த பெயர்ச்சியானது முதலில் இவர்களுக்கு வாழ்க்கையில் துன்ப காலங்களில் இருந்து விடுதலை கொடுக்கப் போகிறார். நீண்ட நாட்களாக மனதில் ஒரு விஷயத்தை நீங்கள் அவமானம் என்று வருந்தி கொண்டு இருந்தால் அந்த அவமானத்திற்கு எல்லாம் தக்க பதில் கொடுக்கும் வகையில் நீங்கள் ஒரு உயர்ந்த அந்தஸ்துக்கு செல்ல போகிறீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு குரு பகவானுடைய இந்த தாக்கமானது எல்லா விஷயங்களிலும் நீங்கள் கவனமாக இருக்கச் செய்யக்கூடிய ஒரு நிலையை கொடுக்கப் போகிறது. அதாவது உங்களை அறியாமல் உங்கள் மனதில் ஒரு சில பயம் உருவாகி, செய்யும் காரியங்களில் ஒரு சில பதட்டங்கள் உருவாகலாம். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து மறையும்.
கன்னி:
கன்னி ராசிக்கு குரு பகவான் உடைய இந்த பார்வையானது அவர்களுடைய பாதி பிரச்சனையை இவர்கள் முழுமையாக கடந்து விடக்கூடிய தைரியத்தை கொடுக்கப் போகிறது. மனதளவில் எதையும் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். சுப காரிய நிகழ்ச்சிகள் இவர்களுக்கு நடக்கக்கூடும்.

துலாம்:
துலாம் ராசிக்கு குரு பகவான் உடைய இந்த பெயர்ச்சியானது அடுத்து வருகின்ற காலகட்டங்களுக்கு உங்களை உயர்த்துவதற்கான அடித்தளத்தை போட்டு கொடுக்கப் போகிறார். வருகின்ற வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொண்டால் நீங்கள் மிக பெரிய உயர்ந்த நிலைக்கு நீங்கள் கட்டாயம் சென்றுவிடலாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு குரு பகவானுடைய இந்த பார்வையானது ஒரு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய ஒரு பார்வையாக இருக்கிறது. ஒரு சிலருக்கு மனதில் குழப்பங்கள் விலகி ஆன்மீக ரீதியான ஒரு ஈடுபாடு வரும். அதாவது கோவில்களுக்கு திருப்பணி செய்தல் போன்ற விஷயங்களில் இவர்கள் ஈடுபடுவதற்கான ஆர்வம் இவர்களுக்கு உண்டாகும்.
தனுசு:
தனுசு ராசிக்கு குரு பகவானுடைய இந்த பெயர்ச்சியானது வாழ்க்கையில் உண்மை நிலையை புரிய வைக்கக்கூடிய ஒரு அற்புதமான காலகட்டமாக அமையப்போகிறார். இவர்களை சுற்றிலும் யார் உண்மையானவர்கள் யார் போலியானவர்கள் என்ற ஒரு முகத்தை தெரிந்து கொண்டு இவர்கள் பேச்சு திறனால் எல்லாவற்றையும் சமாளித்து செயல்படக்கூடிய காலமாக அமையும்.
மகரம்:
குரு பகவானின் இந்த பெயர்ச்சியானது மகர ராசிக்காரர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகவே அமையப்போகிறது. ஒரு சிலருக்கு திருமண வாழ்க்கை நினைத்தது போல் அமையும். தொழில் ரீதியாகவும் சந்தித்து வந்த சங்கடங்கள் எல்லாம் விலகும். நீண்ட நாட்கள் கைகளுக்கு வராத பணம் உங்களைத் தேடி வந்து சேரும் போன்ற ஒரு நல்ல மாற்றங்களை இவர்கள் சந்திக்கப் போகிறார்கள்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு குரு பகவான் உடைய இந்த பெயர்ச்சியால் தேவையில்லாத ஒரு சில செலவுகள் வரலாம். நீதிமன்ற வழக்குகளில் நிச்சயம் உங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்று கொடுக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு செல்லக்கூடிய திடீர் வாய்ப்புகள் வரும்.
மீனம்:
மீன ராசியினருக்கு குரு பகவானுடைய இந்த பார்வையானது ஒரு நல்ல சுப பார்வையாக இருக்கிறது. ஆதலால் இவர்கள் இந்த காலகட்டத்தில் நினைத்ததை எல்லாம் சாதிக்கக்கூடிய காலம். இந்த நாட்கள் குழந்தை இல்லை என்று வருந்துபவர்களுக்கு கட்டாயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் தடைபட்ட காரியங்கள் எல்லாம் மீண்டும் தொடங்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |