2026: ஜுலே 2 முதல் சனியின் ஆட்டம் துவக்கம்.. கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகள் யார்?
மீன ராசியில் பயணம்செய்யும் சனி பகவான் ஜூலை இரண்டாம் தேதி காலை 8. 22 மணிக்கு ரேவதி நட்சத்திரத்தில் இரண்டாம் பாதத்தில் நுழைகிறார். இவர் வருகின்ற ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை அதே பாதத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் மிகப்பெரிய அளவில் நற்பலன்கள் ஒரு சில ராசிகளுக்கு காத்திருக்கிறது.
மேலும் ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சஞ்சரிக்கக்கூடிய கூடிய சனி பகவானுடைய தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும். இது அனைத்து ராசிகளுக்கும் ஒரு சில மாற்றங்களை கொடுக்ககூடும். இந்த நட்சத்திர பெயர்ச்சி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையை வழங்குகிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு மிகச்சிறந்த பொற்காலமாகவே அமையப் போகிறது. வேலையில் மிகப்பெரிய அளவில் உயர்வை பெறப்போகிறார்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்த சம்பள உயர்வு அவர்களுக்கு காத்திருக்கிறது. பதவி உயர்வு தேடி வரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.
கடகம்:
கடக ராசியினருக்கு இந்த காலகட்டங்களில் அதிர்ஷ்டம் முழுமையாக காத்திருக்கிறது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் புதிய வருமானம் பெறுவதை பற்றிய வழிகள் பிறக்கும் வேலையில் உங்களுடைய திறமையால் முக்கிய இடத்தை பெறுவீர்கள் குழந்தைகளின் உயர் கல்விக்காக எடுக்கக்கூடிய முயற்சிகள் கைகூடிவரும் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து தருவீர்கள் தொழில் ரீதியாக திடீர் லாபம் வரக்கூடும்.
கன்னி:
கன்னி ராசி நேயர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியானது இவர்களுக்கு எல்லா துறைகளிலும் வெற்றியை தேடி கொடுக்க போகிறது. உங்களுடைய கடின உழைப்பிற்கு ஏற்ற முழு பலனையும் பெறுவீர்கள். இந்த காலகட்டங்களில் உங்களுடைய வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு அதிகமான வளர்ச்சியை பெறுவீர்கள். உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத் துணையின் வழியே நல்ல புரிதல் உண்டாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |