2026: இந்த ஒரு தவறால் சிக்க போகும் சிம்ம ராசியினர்.. ஜூலையில் கவனம் வேண்டுமாம்
2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிம்ம ராசியினருக்கு எப்படி இருக்க போகுது என்று பார்ப்போம். இவர்களுக்கு இந்த மாத துவக்கத்தில் சுக்கிரன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஐடி, இன்ஜினியரிங் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் இருப்பவர்களுக்கு தொழில் ரீதியாக ஒரு மிகச்சிறந்த முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது.
மேலும், பதினோராம் இடத்தில் புதன் பகவான் ஆட்சி பெற்று அமர்வதால் பணவரவு மற்றும் தொழில் லாபத்திற்கு ஒரு நல்ல வழி வகுக்கும்.
17ஆம் தேதி பிறகு சூரியன் 12ஆம் இடத்திற்கு மாறுவதால் உடல் உஷ்ணம் மற்றும் தூக்கம் தொடர்பான உடல்நல குறைபாடுகளை இவர்கள் சந்திக்க வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும்.
பத்தாம் இடத்தில் செவ்வாய் பகவான் சஞ்சரிப்பதால் வேலை பார்க்கும் இடங்களில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக எந்த ஒரு செயல்களிலும் ஈடுபட வேண்டாம். ஆவணங்களில் கையெழுத்து போடும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இவர்களுக்கு ஏழாம் இடத்தில் உள்ள ராகு மற்றும் சுக்கிரன் பார்வையால் தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரித்தாலும் தேவை இல்லாத மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனத்தோடு கையாள்வது அவசியம்.
இவர்கள் ஸ்ரீ ரங்கநாதரை இந்த காலகட்டங்களில் வழிபாடு செய்வதும், வீடுகளில் லட்சுமி தேவி வழிபாடு செய்வதும் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற ஆடைகளை அணிவதும் சிறந்த பலன்களை கொடுக்கும்.
ஜூலை 15ஆம் தேதி இவர்களுக்கு மிகவும் சிறந்த நாளாக அமைகிறது. அதேபோல் ஜூலை 6 மற்றும் 7 இவர்களுக்கு சந்திராஷ்டம் இருப்பதால் மிகுந்த கவனம் வேண்டும். மேலும், சிம்ம ராசிக்கு மேலும் சிம்ம ராசிக்கு ஜூலை மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |