உங்கள் கனவில் யானை வந்தால் வாழ்க்கையில் கட்டாயம் இது நடக்குமாம்
கனவு என்பது ஆழ் மனதின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொருவருடைய கனவிலும் ஒவ்வொரு விஷயங்கள் வருவதை நாம் காணலாம். அது சில நேரங்களில் நமக்கு தொடர்பில்லாததாகவும் இருக்கிறது. சில நேரங்களில் நம் வாழ்க்கையில் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களின் அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.
அப்படியாக, நம்முடைய கனவில் யானை வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். ஒருவருடைய கனவில் யானை வருவது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. விநாயகப் பெருமானின் வாகனமாக கருதப்படும் யானை ஒரு வெற்றியின் சின்னமாகவே உள்ளது. அறிவியலிலும் யானை மிகவும் முக்கியமான விளங்காக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் யானை அதிகமாக உண்டாலும் அந்த கூட்டம் ஒரு காட்டையை உருவாக்கும் மகத்துவம் கொண்டது. அதனால்தான், யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்வார்கள். அப்படியாக, ஒருவருடைய கனவில் கருப்பு யானை வருகிறது என்றால் என்ன காரணம் என்று பார்ப்போம்.

கருப்பு யானை அரசர்களின் முதன்மையான வாகனமாகும். ஒரு காலத்தில் அரசர்கள் வாரிசு இல்லாமல் இறந்து விட்டால் புதிய அரசினை கண்டுபிடிக்கக்கூடிய பொறுப்பை பட்டத்து யானைகளுக்கே வழங்கப்படும்.
அதேபோல், கனவில் கருப்பு யானையை கண்டால் உங்களுக்கு அரசாங்க உத்தியோகம், அரசு ஒப்பந்தம் அல்லது அரசின் வழியாக ஆதாயம் கிடைக்கப் போகிறது என்று பொருள்.
உங்களின் கனவில் வெள்ளை யானையை பார்த்தால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவு திறக்கப் போகிறது என்பது பொருள்.
ஏனெனில், இந்திரனின் வாகனமாக விளங்கும் வெள்ளை யானை மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த வெள்ளை யானையை நம் கனவில் பார்க்கின்ற பொழுது மகிழ்ச்சி கிடைப்பதோடு வாழ்க்கையில் விரைவில் நற்செய்திகள் வந்து சேரும் என்று பொருள்.

அதேபோல், கனவில் யானையின் மீது ஏறி சவாரி செய்வது போல் கண்டால் அது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும். ஜோடி யானையாக உங்களுடைய கனவில் பார்த்தால் உங்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும் என்பதின் அர்த்தமாகும்.
இதைவிட முக்கியமாக யானை உங்களை ஆசீர்வாதம் செய்வது போல் கண்டால் உங்களுக்கு வாழ்க்கையில் முழு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகுது என்று பொருள். இருப்பினும் யானை துரத்துவது போல் கனவு வந்தால் நீங்கள் வருங்காலங்களில் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதையும் அவை உணர்த்துகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |