மகர ராசியினருக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. ஜூலை மாதம் கட்டாயம் இது நடக்குமாம்

By Sakthi Raj Jun 25, 2026 12:04 PM GMT
Report

ஜோதிடத்தில் சனி பகவானுடைய ஆதிக்கத்தை பெற்ற மகர ராசியினர் எப்பொழுதும் கடுமையான உழைப்பாளிகளாக இருப்பார்கள். சுறுசுறுப்பாக இயங்க கூடியவர்கள் இவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

ஜூலை மாதத்தில் இவர்களுக்கு நீண்ட நாட்கள் சந்தித்த பொருளாதார நெருக்கடிகள் விலகப்போகிறது. ராசி நாதன் சனிபகவான் மற்றும் குரு பகவானின் சஞ்சாரம் இவர்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதால் முன்னேற்றமான ஒரு சூழ்நிலை காணப் போகிறார்கள்.

ஆறாம் இடத்தில் புதன் பகவான் ஆட்சி பெற்று அமர்வதால் இவர்களுக்கு வேலை ரீதியாக சந்தித்து வந்து இழப்புகளை மீண்டும் பெற்று ஒரு நல்ல இடத்தில் அமர்வதற்கான சூழ்நிலை உருவாகும். ஐடி துறையில் இருப்பவர்களுக்கு சாதனை புரியக்கூடிய அற்புதமான காலகட்டம்.

சொத்து அல்லது நிலம் தொடர்பான அல்லது சட்டம் பிரச்சனைகள் இருப்பவர்கள் சற்று கவனமாக கையாள்வது அவசியமாகும். வெளிநாட்டு தொடர்பான விசா அல்லது கூட்டுத் தொழிலில் முதலீடு செய்வதற்கு முன்பாக பலமுறை யோசித்து முடிவு எடுப்பது அவசியம்.

2026: ருத்ர தாண்டவம் ஆடும் ராகு.. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

2026: ருத்ர தாண்டவம் ஆடும் ராகு.. மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

சிலர் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த காலகட்டங்களில் பணவரவை உயர்த்துவதற்கு நீங்கள் திருநாகேஸ்வரம் ராகு தலத்திற்கு சென்று வழிபாடு செய்யலாம். திருப்பாம்புரம் மற்றும் திருநல்லாறு சனி பகவானுடைய ஆலயத்திற்கு சென்று சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகச் சிறந்த பலன் கொடுக்கும்.

இவர்களுக்கு ஜூலை 27ஆம் தேதி புதிய வணிக வாய்ப்புகள் தேடி வருவதற்கான நாள். இவர்கள் ஜூலை 17 மட்டும் 18 ஆம் தேதிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஜூலை 10 அன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை என்பதால் முருகப்பெருமானின் வழிபாடு செய்வது இவர்களுக்கு எதிரிகளை வீழ்த்த கூடிய அற்புதமான ஆற்றலை கொடுக்கப்போகிறது.

மேலும் மகர ராசியினருக்கு இந்த ஜூலை மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியில் பார்த்த தெரிவித்துக் கொள்வோம்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US