2026: ஜூலை மாதத்தில் அதிரடி திருப்பங்களை சந்திக்கப்போகும் தனுசு ராசியினர்
தனுசு ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். இவர்களுக்கு நான்காம் இடத்தில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் வேலை பளு மற்றும் மன அழுத்தம் போன்றவை சந்திக்க நேரும். இருப்பினும் ஏழாம் இடத்தில் புதன் பகவான் ஆட்சி பெறுவதால் வணிகம் செய்பவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த மாதமாக அமைகிறது.
ஒரு சிலருக்கு உலக அளவில் புகழ் அடைவதற்கான வாய்ப்புகள் உண்டு. மேலும், தொழில் அல்லது சொத்து விஷயங்களில் பார்ட்னர்ஷிப் வைத்துக் கொள்வதை கட்டாயம் இந்த மாதம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் நீங்கள் எந்த காரியத்தையும் செயல்படுத்துவது மட்டுமே உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
எட்டாம் இடத்தில் சூரியன் மற்றும் குரு பகவான் இருப்பதால் தந்தை உறவுகளுக்கு இடையே சில கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆதலால், உறவுகள் இடையே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு விட்டுக் கொடுத்து சொல்லுங்கள்.
ஆறாம் இடத்து அதிபதி சுக்கிர பகவான் உங்களுக்கு ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் வேலை காரணமாக திடீர் வெளியூர் பயணம் அல்லது வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் உருவாக்கும்.
சனி பகவான் வக்கிரம் அடைவதால் நீங்கள் சனீஸ்வர ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.
ஜூலை 15 மற்றும் 16ஆம் தேதிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் சஷ்டி மற்றும் சிவராத்திரி ஆகிய தேதிகளில் வழிபாடு செய்வதும் சிறந்த பலன்களை கொடுக்கும். இந்த காலகட்டங்களில் உங்களுக்கு மனம் தான் உங்களுடைய எதிரியாக செயல்பட போகிறது.
தேவையற்ற கவலைகளை தவிர்த்து உங்களுடைய சிந்தனையையும் செயலையும் ஆக்கபூர்வமாக செய்வதால் மட்டுமே நீங்கள் நன்மை பெறலாம். மேலும், தனுசு ராசியினருக்கு ஜூலை மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |