2026: மீண்டும் ஆட்டத்தை துவங்கும் ராகு.. ஜூன் 30 முதல் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகமாக இருக்கக்கூடிய ராகு பகவானுடைய பார்வை மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இவர் எந்த கிரகத்தினுடைய சேர்கிறாரோ அந்த கிரகம் இருக்கும் இடத்தை பொறுத்து அந்த ராசியினர் நன்மை தீமைகளை பெறுகிறார்கள்.
மேலும், ராகு பெயர்ச்சி என்றாலே எல்லோருக்கும் ஒரு விதமான அச்சம் உருவாகுவதையும் நாம் பார்க்கலாம், காரணம், ராகுவின் ஆட்டம் மிகவும் மோசமான பிரச்சனைகளை கொடுக்க கூடும். அந்த வகையில், ஜூன் 30-ம் தேதி ராகு பகவான் அவிட்ட நட்சத்திரத்திற்கு இடம் மாறுகிறார். இந்த நட்சத்திரத்தில் ராகு பகவான் 2027 ஏப்ரல் மாதம் வரை இருக்கிறார்.
இந்த நட்சத்திர பெயர்ச்சியின் காரணமாக குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் தங்களுடைய வாழ்க்கையில் தொழில் மற்றும் நிதி நிலைகளில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியானது இவர்களுக்கு சில சவால்களையும் சிரமங்களையும் கொடுக்க போகிறது. திடீரென்று எதிர்பாரா செலவுகளை சந்திக்கப் போகிறார்கள்.
பண இழப்புகள் பண சிக்கல் உருவாகும். தேவையில்லாமல் ஆடம்பர செலவுகளை இவர்களை இந்த காலகட்டத்தில் செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். வேலையில் சில தடைகளையும் தாமதங்களையும் சந்திக்கலாம்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டங்களில் இவர்கள் மிகவும் பொறுமையாகவும் எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும்.
பெற்றோர்களுடன் தேவையில்லாத வாக்குவாதம் கருத்து வேறுபாடுகள் போன்ற நிலை வரலாம். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டிய காலகட்டமாகும். எதிரிகளின் தொல்லைகளால் சில மன கஷ்டங்களை சந்திக்க கூடிய நிலை வரலாம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலை செய்யும் இடங்களில் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக பேச வேண்டும். புதிதாக தொடங்கும் காரியங்களில் சில தாமதங்களை அவர்கள் சந்திக்கலாம். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடுவது நன்மையை தரும்.
எந்த ஒரு செயல்களிலும் விழிப்புணர்வோடு செய்தால் நல்ல பலன்களை பெறலாம். பழைய கடன்களை அடைப்பதற்காக சில அழுத்தம் வரலாம். வேலை செய்யும் இடங்களில் வாக்குவாதம் தவிர்த்து விடுங்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |