2026 கந்த சஷ்டி: 6 நாட்களும் விரதம் இருக்கும் முறை மற்றும் உணவு விதிகள்
சூரபத்மனை முருகப்பெருமான் வென்ற அந்த நிகழ்வை ஆண்டுதோறும் நாம் கந்த சஷ்டியாக கொண்டாடி வருகின்றோம். அப்படியாக, 2026 ஆம் ஆண்டு கந்த சஷ்டி விரதம் நவம்பர் 10ஆம் தேதி துவங்கி நவம்பர் 15ஆம் தேதி சூரஸம்ஹாரமும், நவம்பர் 16ஆம் தேதி முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெற இருக்கிறது.
அந்த வகையில், நாளை கந்த சஷ்டி விரதம் துவங்க இருக்கின்ற நேரத்தில் எப்படி விரதம் இருக்கலாம்? வழிபாடு நேரம் குறித்த விவரங்களை பார்க்கலாம். என்னதான் நம்முடைய மனதில் விரதம் இருக்க வேண்டும் என்கின்ற பக்தியும் ஆசையும் இருந்தாலும் உடல் நலனை கருத்தில் கொண்டு விரதம் இருப்பது அவசியம்.
அப்படியாக, கந்தசஷ்டி விரதம் முழு விரதமாக இருப்பவர்கள் பழம், பால், தண்ணீர், மிளகு, உப்பு காரம் இல்லாத உணவு, சாதம் இல்லாத உணவு சாத்விக உணவு ஒருவேளை என ஏதேனும் ஒரு முறையை நீங்கள் கடைபிடித்து விரதம் இருக்கலாம்.

கந்த சஷ்டி விரதம், பூஜை முறைகளும்:
ஆறு நாட்களும் விரதமிருந்து முருகப்பெருமானை முறையாக வழிபாடு செய்வது சிறப்பு. இந்த ஆறு நாட்களும் அதிகாலையில் எழுந்து குளித்து காலை 6 மணி முதல் 7 மணிக்குள் விரதத்தை துவங்க வேண்டும். பிறகு பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும்.
அதோடு முருகப்பெருமான் திருவுருவப்படத்திற்கு அலங்கரித்து மலர்களால் அர்ச்சனையை செய்து வேல் இருந்தால் அதற்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்வது நல்லது. நெய்வேத்தியமாக முருகப்பெருமானுக்கு சர்க்கரை பொங்கல், வாழைப்பழம், தேங்காய்ப் பஞ்சாமிர்தம், வெண்பொங்கல், ரவை கேசரி, அவல், பாயாசம் ஆகியவற்றை படைக்கலாம்.
முடிந்தவர்கள் உங்களால் என்ன நெய்வேத்தியம் படிக்க முடிகிறதோ அதையும் செய்யலாம். மாலை நேரத்தில் ஆறு மணிக்கு விளக்கேற்று வழிபாடு செய்வதும் அவசியம்.

கந்த சஷ்டி விரதத்தின்போது செய்யக்கூடியவை:
சஷ்டி விரதம் ஆறாம் நாள் சூரசமஹாரத்திற்கு பிறகு ஒரு கப் பால் அருந்தி விரதத்தை முடிக்கலாம். அல்லது ஏழாம் நாள் முருகப்பெருமான் தெய்வானைதிருக்கல்யாணத்தன்று பாரனை செய்யலாம். விரதம் இருக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் ஏழு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பது சிறந்தது.
இடையில் உடல்நிலை பிரச்சினை வந்தால் நிச்சயமாக அதை கைவிடுவதில் எந்த தவறும் இல்லை. இந்த காலகட்டங்களில் முருகப்பெருமானை தவறாமல் நினைத்து வழிபாடு செய்வது அவசியம். தீய சொற்கள் பேசாமல் இருப்பதும், சண்டையிடாமல் இருப்பதும், அதிக ஆசைகள் கோபம் கொள்ளாமல் இருப்பது முக்கியம்.
இந்த நேரங்களில் கந்த சஷ்டி கவசம் படிப்பது காலை, மாலையில் முருகப்பெருமானை நினைத்து தீபம் ஏற்று வழிபாடு செய்வது சிறந்தவது.

பொறுப்புத் துறப்பு:
இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள வழிபாடு மற்றும் விரத முறைகள் ஆன்மிக நம்பிக்கைகள், பாரம்பரிய நடைமுறைகளின் அடிப்படையில் பொதுத் தகவலுக்காக வழங்கப்பட்டுள்ளன. குடும்ப வழக்கம் மற்றும் கோயில் மரபுகளுக்கு ஏற்ப நடைமுறைகள் மாறுபடலாம். உடல் ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் விரதம் மேற்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது சிறப்பு.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |