2026: அக்டோபர் மாதம் துலாம் ராசியினர் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்
2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துலாம் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். துலாம் ராசியினருக்கு அக்டோபர் மாதம் வேலை ரீதியாக சற்று கவனமாக இருக்க வேண்டும். சூரியன் நீசம் அடைவதால் மேல் அதிகாரிகளுடன் தேவை இல்லாத வாக்குவாதம் தொந்தரவுகள் வரலாம்.
மேலும், அக்டோபர் 26 ஆம் தேதி முதல் குரு பகவான் சிம்ம ராசிக்கு அதிசாரம் பெற்று வருவதால் வேலை மாற்றம் அல்லது பதவி உயர்வு தொடர்பான சூழல் உங்களுக்கு மிகவும் சாதகமாகவே அமையும். செவ்வாய் பத்தாம் இடத்தில் நீசபங்க ராஜ யோகம் பெற்றுள்ளார்.
இதனால் நீண்ட நாள் கைகளுக்கு வராத பணம் கூட நீங்கள் வசூல் செய்து விடுவீர்கள். இருப்பினும் அழகு சாதனங்கள் விலை உயர்ந்த கார் அல்லது ஆடம்பர பொருட்கள் சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது.
இந்த காலகட்டங்களில் வயிறு மற்றும் கல்லீரல் தொடர்பான ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும். தவறான பழக்க வழக்கங்கள் இருந்தால் உடனடியாக விட்டு விடுவது நல்லது. நீங்கள் முருக வழிபாடு மற்றும் சத்ரு சம்ஹார யோகம் செய்வது நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும்.
அக்டோபர் 11 ஆம் தேதி துவங்க இருக்கின்ற நவராத்திரி காலத்தில் பெண் தெய்வ வழிபாட்டில் நீங்கள் கலந்து கொள்ளும் பொழுது சிறந்த பலன்கள் கிடைக்கும். மேலும், அக்டோபர் 1, 2 மற்றும் 28, 21 ஆகிய நாட்களில் தொடக்கத்திற்கும் முடிவுக்கு முக்கியமான நாளாக குறிப்பிடப்படுகிறது.
மேலும், துலாம் ராசிக்கு அக்டோபர் மாத பலனை பற்றி இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.