6 மாதம் கருட மந்திரம் சொன்னால் தன் சக்தியின் ஒரு துளியை தரும் வருட பகவான்
கருட பகவான் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது நம்முடைய தடைகளை அகற்றுபவர். அதாவது, பெருமாளுடைய வாகனமாக இருக்கக்கூடிய கருட பகவான் பக்தர்கள் சொல்லக்கூடிய குறைகளை விரைவில் பகவானிடம் எடுத்துச் சென்று அவர்களுக்கான ஒரு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு அற்புத வடிவமாக இருக்கிறார்.
அந்த வகையில், ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருப்பவர்கள் கருட மந்திரங்களை பாராயணம் செய்வது நல்லது. நீங்கள் ஒரு காரியத்திற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் கருட பகவானை வழிபாடு செய்ய காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் யாவும் விலகும். வெற்றிகள் உங்கள் கைகளில் வந்து சேரும்.

அந்த வகையில், கருட மந்திரத்தை தொடர்ந்து ஒருவர் ஆறு மாத காலம் உச்சரித்து வருகின்ற பொழுது கருட பகவான் அவருடைய சக்தியில் ஒரு துளியை அவருக்கு தருகிறார் என்பது ஐதீகம். அந்த கருட மந்திரத்தை பாராயணம் செய்கின்ற பொழுது சர்ப்ப தோஷம் ஆகியவை நீங்குகிறது.
ஸ்ரீ கருட காயத்ரி:
ஓம் தத்புருஷாய வித்மஹே|
ஸ்வர்ண பக்ஷாய தீமஹி |
தன்னோ கருட ப்ரசோதயாத் ||
பகவானின் வாகனமாகவும் பெரிய திருவடியும் என்று போற்றக்கூடிய கருட பகவான் நமக்கு மிகப்பெரிய அளவில் அருளாசியை வழங்க கூடியவர்.

இந்த மந்திரத்தை ஒருவர் 1008 முறை பாராயணம் செய்கின்ற பொழுது விஷத்தால் ஏற்படுகின்ற பாதிப்பும் நோய்களும் விலகும் என்று பலரும் அனுபவத்தால் கண்ட உண்மையாக இருக்கிறது.
ஆரோக்கிய குறைபாடு எதிரிகள் தொல்லை என்று வாழ்க்கையில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் இந்த மந்திரத்தை தொடர்ந்து பாராயணம் செய்து வரை நிச்சயம் மிகப்பெரிய அளவில் நன்மை கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |