கண் திருஷ்டியில் இருந்து உங்களை காப்பாற்றும் 9 சக்தி வாய்ந்த பரிகாரங்கள்
இந்த உலகத்தில் கண்திருஷ்டி என்பது நம் ஜாதகத்தில் இருக்கக்கூடிய கெட்ட நேரங்களை விடவும் மிகக் கொடுமையாக பாதிக்க கூடியது. அந்த வகையில், கண்திருஷ்டியில் இருந்து விடுபட செய்ய வேண்டிய 9 முக்கியமான பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.
1. வீடுகளில் இருக்கக்கூடிய தீய ஆற்றலை போக்க மாலை நேரங்களில் கற்பூரத்துடன் கிராம்பு சேர்த்து எரித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
2. கருப்பு உப்பு கடுகு மற்றும் காய்ந்த மிளகாய் எடுத்துக்கொண்டு நபரை ஏழு முறை சுற்றி வெளியே வீசினால் கண் திருஷ்டி அண்டாது.

3. வீடுகளில் கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல் நுழையாமல் தடுப்பதற்கு எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாய் தொங்கவிடலாம் நல்ல பலன் உண்டு.
4. வீடுகளை துடைக்கும் பொழுது உப்பு நீரால் சுத்தம் செய்வது வீடுகளில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகளை விரட்டும்.
5. தினமும் வீடுகளில் ஹனுமன் சாலிசா படிப்பது மிகப்பெரிய ஆற்றலைப் பெற்றுக் கொடுக்கும்.
6. கண் திருஷ்டியில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நெற்றியில் அல்லது காதுக்கு பின்னால் கருப்பு மை வைத்துக் கொள்வது நல்லது.

7. வீட்டை சுற்றி ஒவ்வொரு மூலையிலும் கங்கா தீர்த்தம் கொண்டு தெளிக்கலாம்.
8. வீடுகளில் தினமும் சங்கு ஊதும் பொழுது எதிர்மறை ஆற்றல் முற்றிலும் விலகுகிறது.
9. தினமும் மாலை நேரங்களில் கோவிலிலோ அல்லது வீடுகளிலோ விளக்கு ஏற்றுவது நல்ல பாதுகாப்பு அளிக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |