2026: தைத் திருநாளில் நடக்கும் சூரிய பெயர்ச்சி.. ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்
நவகிரகங்களில் சூரிய பகவான் தலைமை கிரகமாக விளங்குகிறார். சூரியன் தான் ஒருவருடைய தந்தை, ஒருவருடைய புகழ் அந்தஸ்து ஆகியவற்றை குறிக்கக்கூடிய முக்கியமான கிரகமாக இருக்கிறார். இவர் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தொடக்கத்திலும் அவருடைய இடத்தை மாற்றுகிறார்.
அந்த வகையில் ஜனவரி 14-ஆம் தேதி சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து விலகி மகர ராசிக்கு செல்கிறார். இந்த சூரியனின் இடமாற்றமானது கட்டாயம் 12 ராசிகளுக்கும் பிரதிபலிக்கும். அந்த வகையில் இந்த மகர ராசியில் சூரிய பெயர்ச்சியானது எந்த ராசிகளுக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் சாதகமான பலனை கொடுக்க இருக்கிறது என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினர் இந்த சூரிய பெயர்ச்சியின் காரணமாக கொஞ்சம் சுறுசுறுப்பாக வேலை செய்ய தொடங்குவார்கள். பணியிடங்களில் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்கக்கூடிய தன்மை உண்டாகும். அது மட்டும் அல்லாமல் பூர்வீக இடத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் எல்லாம் அகன்று ஒரு நல்ல மன அமைதி கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு சூரிய பகவானின் இந்த மகர ராசி பெயர்சியானது இவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு தெளிவை கொடுக்க போகிறது. மனதில் நீண்ட நாட்களாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று குழப்பத்தில் இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அந்த குழப்பம் விலகி செல்லக்கூடிய அமைப்பு உண்டாக்கும். தொழில் ரீதியாக பாராட்டுகளை பெறுவீர்கள்.
மீனம்:
மீன ராசியினருக்கு சூரிய பகவானின் இந்த மகர ராசி பெயர்சியானது இவர்களுக்கு சொத்து விவகாரங்களில் இருந்த பிரச்சனைகளுக்கும் மற்றும் பூர்வீக இடங்களில் உங்களுக்கு பிறரால் தொந்தரவுகள் இருக்கிறது என்றால் அந்த பிரச்சனைகள் எல்லாம் முற்றிலும் முடிவுக்கு வரக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கிறது. தந்தை மற்றும் மகன் வழியில் உங்களுக்கு ஒரு நல்ல ஆதரவு கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |