2026: வீட்டில் பொங்கல் வைக்க உகந்த நேரம் என்ன?? முழு விவரங்கள் இதோ
தமிழர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் பொங்கல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதாவது தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும் அறுவடை திருவிழாவாகவும் போற்றப்படும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் உலகெங்கும் இருக்கக்கூடிய தமிழர்களால் மிகச் சிறப்பாக கொண்டாட கூடிய பாரம்பரிய பண்டிகையாகும்.
அதாவது தை மாதத்தின் முதல் நாளில் அதிகாலை எழுந்து வீட்டின் வாசலில் வண்ண நிறங்களால் கோலமிட்டு வீடுகளை பூக்கள் கொண்டு அலங்கரித்து தைத்திருநாளை வரவேற்கும் வகையில் மிகச் சிறப்பாக கொண்டாடுவோம். மேலும், "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற ஒரு அற்புதமான பழமொழியும் உண்டு.

அதனால் புதிய பானையில் புது அரிசி கொண்டு பால் பொங்கி வரும் வேளையில் "பொங்கலோ பொங்கல்" என்று குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து இந்த தை திருநாளான முதல் நாளை மிகச் சிறப்பாக வரவேற்று கொண்டாடுவார்கள்.
அதோடு பொங்கி வந்த பொங்கலை சூரிய பகவானுக்கு படைத்து நன்றி செலுத்தி வழிபாடு செய்வதும் வழக்கம். சிலர் சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் என இரண்டு விதமான பொங்கலை படைத்து வழிபாடு செய்வார்கள்.
இன்னும் சிலர் பொங்கலுடன் பலவிதமான காய்கறிகளை சேர்த்து சமைத்து படையல் ஈடும் வழக்கமும் கொண்டிருப்பார்கள்.
அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி வியாழக்கிழமை அன்று குரு பகவானுக்கு உரிய உகந்த நாளில் வருவது இன்னும் சிறப்பு பெறுகிறது. பொங்கல் தினத்திற்கு முன்னதாக வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி அன்று மக்கள் போகி பண்டிகை கொண்டாடி மகிழ்வார்கள்.

அதாவது நம்மிடம் இருக்கக்கூடிய பழைய விஷயங்களையும் அவ்வப்போது கழிப்பதனால் மட்டுமே வாழ்க்கை செழிக்கும் என்கின்ற ஒரு நோக்கத்தில் இந்த போகி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படும்.
அந்த வகையில் போகி பண்டிகை மறுநாள் ஜனவரி 15 ஆம் தேதி அன்று பொங்கல் வைப்பதற்கு உகந்த நேரம் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். ஒரு சிலர் சூரிய பொங்கல் வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதாவது காலை 6 மணிக்கு சூரிய உதயம் ஆவதற்கு முன்பு பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து வழிபாடு செய்வார்கள். இதுவே சூரிய பொங்கல் என சொல்லுவார்கள். மேலும் காலை 6 மணிக்கு முன்பாக வைக்கக்கூடிய பொங்கல் நிகழ்வுக்கு நாம் நல்ல நேரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு அதிகாலை பொங்கல் வைக்கமுடியாதவர்கள் நாளை பொங்கல் வைக்க உகந்த நேரமாக காலை 4.30nமணி முதல் 6 மணி வரை உள்ளது. அதை தொடர்ந்து காலை7. 45 மணி முதல் 8. 45 மணி வரை வைக்கலாம். அதை தொடர்ந்து காலை 10:35 மணி முதல் பகல் 1.00 மணி வரை நீங்கள் உங்களுடைய வீடுகளில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யலாம்.
உங்கள் வாழ்க்கையில் நெடுங்காலமாக ஒரு பிரச்சனைகள் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் மனதார இந்த பொங்கல் பண்டிகையை அன்று இறைவனை வேண்டி பொங்கல் வைத்து வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் அன்றைய நாளில் உங்களுக்கு ஒரு நல்ல விடை கிடைக்கும்.
ஆக 2026 ஆம் ஆண்டு தைத்திருநாளை அனைவரும் மிகச் சிறப்பாக வீடுகளில் கொண்டாடி அனைத்து இறைவனுடைய ஆசிர்வாதமும் பெற்று மகிழ்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |