2026: பொங்கல் பண்டிகை அன்று செய்யவேண்டிய முக்கியமான 7 பரிகாரங்கள்
ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி ஆன பொங்கல் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படும். அப்படியாக 2026 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி அன்று பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கிறது. அன்றைய தினம் சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார்.
இது உத்தராயணம் காலத்தில் துவக்க நாளாகும். இந்த நாளில் நாம் குறிப்பிட்ட சில ஏழு விஷயங்களை செய்தால் நமக்கு அதிர்ஷ்டம் தேடி வருவதோடு சூரிய பகவானுடைய முழு அருளையும் நாம் பெறலாம் அப்படியாக பொங்கல் பண்டிகை அன்று நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஏழு விஷயங்களை பற்றி பார்ப்போம்.

பொங்கல் தினத்தன்று செய்ய வேண்டிய ஏழு பரிகாரங்கள்:
1. நம்முடைய வாழ்க்கையில் சூரிய பகவானுடைய அருள் மிக மிக முக்கியம். அதாவது சூரியபகவான் தான் நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய பொறுப்புகளை கொடுக்கக் கூடியவர்.
ஆதலால் பொங்கல் தினத்தன்று அதிகாலையில் நீராடி ஒரு செப்பு பாத்திரத்தில் நீர் எடுத்து அதில் கருப்பு எள் மற்றும் வெள்ளம் அதோடு சிவப்பு மலர்களையும் சேர்த்து பிறகு சூரியனை நோக்கி கிழக்கு திசையில் நின்று "ஓம் சூரியாய நம" என்ற மந்திரத்தை உச்சரித்தபடி நீரை அர்ப்பணிக்கவும். இவ்வாறு செய்யும் பொழுது உங்களுக்கு சூரிய பகவானால் ஜாதகத்தில் ஏற்படுகின்ற தோஷம் தடைகள் எல்லாம் விலகும்.
2. குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி அல்லது நினைத்த நேரத்தில் கைகளுக்கு பணம் வருவதற்கு தாமதம் போன்ற ஒரு நெருக்கடியான பண பிரச்சனை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் பொங்கல் தினத்தன்று கோவில் அல்லது ஏழை எளிய மக்களுக்கு ஒரு சுத்தமான நெய் மற்றும் வெல்லம் தானமாக கொடுக்கலாம். வெல்லம்சூரிய பகவானுடைய தொடர்புடையது. நெய் சுபிட்சத்தை கொடுக்கக் கூடியது. இதை நாம் தானம் செய்யும் பொழுது தடைகள் யாவும் விலகும்.
3. மேலும் பொங்கல் தினத்தன்று அரிசி மற்றும் உளுந்து சேர்த்த உணவை தானம் செய்வது கட்டாயம் ஒரு நல்ல பலனை கொடுக்கும். காரணம் அரிசி சந்திர பகவானையும் உளுந்து சனிபகவானையும் குறிக்கக்கூடியது. இவை நமக்கு ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரக தோஷங்களில் இருந்து விடுதலை பெற்றுக் கொடுக்கும்.
4. தை மாதம் சற்று குளிர் காலம் என்பதால் முதியவர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு கம்பளி போர்வைகள் மற்றும் கத கதப்பான ஆடைகளை அவர்களுக்கு தானம் செய்வதால் ஒரு நல்ல புண்ணியம் சேரும். இதனால் ராகு மற்றும் சனி பகவான் கொடுக்கக் கூடிய தீய பலன்களில் இருந்து நம்மை விடுவிக்கும்.
5. இந்து மத சாஸ்திரத்தில் எள் என்பது தவிர்க்க முடியாத ஒரு நற்பலன்களை கொடுக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆதலால் பொங்கல் தினத்தன்று நாம்எள் தானம் செய்யும் பொழுது நிச்சயம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கர்ம வினைகள் யாவும் குறையும். எள் உருண்டையை நீங்கள் தானம் செய்யும் பொழுது உங்கள் வாழ்க்கை இருக்கக்கூடிய கசப்பான நிலை மாறும்.

6. மகாலட்சுமியின் அம்சமாக போற்றக்கூடிய பசுவிற்கு பொங்கல் தினத்தன்று நிச்சயமாக குடும்பமாக சென்று உங்கள் கைகளாலே பசுவிற்கு உணவு வழங்கினால் செல்வ செழிப்பான வாழ்க்கை நிச்சயம் உண்டாகும்.
7. முடிந்தவர்கள் பொங்கல் தினத்தன்று புனித நீர்களில் நீராடி வழிபாடு செய்தாலும் மிகவும் விசேஷம். முடியாதவர்கள் குளிக்கும் நீரில் வீடுகளில் நீங்கள் புனித நீர் சேமித்து வைத்திருந்தாலும் அதனை சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து கருப்பு எள் சேர்த்து குளித்தாலும் நம் ஆன்மா சுத்தமடையும் கர்மவினையானதும் குறையும்.
மேலும், இந்த ஆண்டு தை திருநாள் பொங்கல் பண்டிகையானது வியாழக்கிழமை அன்று வருகிறது. வியாழன் என்றாலே குரு பகவானுக்கு உகந்த நாள். ஆக இந்த நாளில் குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம்சாற்றி கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபாடு செய்வதால் குரு தோஷம் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |