2026: மகா கந்த சஷ்டி விரதம் எப்பொழுது? வீடுகளிலே காப்பு கட்டி விரதம் இருக்கும் முறை..
உலகமெங்கும் வாழக்கூடிய முருக பக்தர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய முக்கியமான விரதங்களில் கந்த சஷ்டி விரதம் ஒன்று.
இந்த 2026 ஆம் ஆண்டு மகா கந்த சஷ்டி விரதம் நவம்பர் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று துவங்கி நவம்பர் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சூரசம்ஹாரமும், நவம்பர் 16ஆம் தேதி திங்கட்கிழமை முருகன் தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
இந்த கந்த சஷ்டி விழாவின் பொழுது ஆறு நாட்களும் முருக பக்தர்கள் மிகவும் கடுமையாக விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். பலர் முருகன் ஆலயங்களுக்கே சென்று ஆறு நாட்களும் தங்கி விரதம் இருந்து வழிபாடு செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
முருகன் ஆலயத்திற்கு சென்று விரதம் இருக்க முடியாதவர்கள் வீடுகளிலேயே விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள். அப்படியாக, வீடுகளிலேயே காப்பு கட்டி மகா கந்த சஷ்டி விரதத்தை வழிபாடு செய்யக்கூடிய முறையைப் பற்றி பார்ப்போம்.

முருகன் கோவில்களுக்கு சென்று தங்கி விரதம் இருக்க முடியாத முருக பக்தர்கள் வீட்டிலேயே விரதம் இருப்பார்கள். கந்தசஷ்டியின் ஆறு நாட்களும் வீட்டிலேயே விரதம் இருந்து, காலை மற்றும் மாலை வேளைகளில் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று, முருகனை தரிசித்தும் விரதம் இருப்பார்கள்.
வீட்டிலேயே காப்புக்கட்டி கந்தசஷ்டி விரதம் இருக்கும் முறை :
கந்த சஷ்டி தினமான முதல் நாள் நவம்பர் 9 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வீடுகளை சுத்தம் செய்து காப்பு கட்டுவதற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
காப்பு கட்டுவதற்கு விரலி மஞ்சள் கிழங்கு ஒன்று, கடிமான பருத்தி நூல் அல்லது சிவப்பு நிற கயிறு மலர்கள் முருகப்பெருமானுக்கு நெய் வைத்தியம் படைக்க பழங்கள், பால், சந்தனம், குங்குமம், திருநீறு ஆகியவை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கந்த சஷ்டி விரதத்தின் முதல் நாள் நவம்பர் 10ஆம் தேதி அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நேரத்தில் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகளை அணிந்து பூஜை அறையில் அமர வேண்டும். பிறகு பருத்தி நூலில் மஞ்சள் தடவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
மஞ்சள் கிழங்கை மஞ்சள் நூல் அல்லது சிவப்பு கயிற்றில் கட்டி முருகப்பெருமானுடைய படம் அல்லது சிலையின் முன்பாக காலடியில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். முருகப்பெருமான் படத்திற்கு நெய்வேத்தியம் படைத்து விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

தொடர்ந்து மலர்களைக் கொண்டு முருகப்பெருமானை அர்ச்சனை செய்த பிறகு மனதார வழிபாடு செய்ய வேண்டும். நாம் துவங்கக்கூடிய விரதம் எந்த ஒரு தடையின்றி நினைத்தது போல் நடப்பதோடு நினைத்த காரியமும் நடப்பதற்கு முருகப்பெருமானை துணையாக இருந்து வழிநடத்துமாறு நன்றாக வழிபாடு செய்து கொள்ள வேண்டும்.
பிறகு, முருகப்பெருமான் பாதத்தில் வைத்த காப்பு கயிறு எடுத்து கையில் கட்டிக் கொள்ளலாம். ஆண்களாக இருந்தால் வலது கைகளிலும் பெண்களாக இருந்தால் இடது கைகளிலும் கட்டிக் கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரம் முடிந்து மறுநாள் திருக்கல்யாணம் நிறைவடையும் வரை காப்புக் கழற்ற கூடாது.
கந்த சஷ்டி விரதம் நல்லபடியாக நிறைவு செய்ததும் முருகப்பெருமான் திருக்கல்யாணம் அன்று மாலை முருகப்பெருமானுக்கு ஏதாவது ஒரு இனிப்பு நெய்வேத்தியம் படைத்து பூஜை செய்து வழிபாடு செய்த பிறகு காப்பை கழற்றி மீண்டும் முருகப்பெருமானுடைய பாதத்தில் வைத்து விட வேண்டும்.
முருகப்பெருமான் திருக்கல்யாணத்திற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை என்பதால் அன்றைய தினத்தை விட்டு விட்டு அதற்கு மறுநாள் புதன்கிழமை அன்று ஓடுகின்ற தண்ணீரில் அந்த காப்பு கயிற்றை விட்டு விடலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |