இன்று நடக்கும் சனியின் நட்சத்திர மாற்றம்.. 12 ராசிகளுக்கும் எப்படி இருக்க போகிறது?

By Sakthi Raj Mar 21, 2026 08:43 AM GMT
Report

கிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனி பகவான். காரணம் அவர் நமக்கு வாழ்க்கையின் முழு பாடத்தை கற்றுக் கொடுக்க சில கால அவகாசம் எடுத்துக் கொள்கிறார். பிறகு அவர் இடம் மாறும்பொழுது அவருடைய தீய தாக்கத்தின் ஆற்றல் குறைந்து நன்மை நடக்கிறது.

அப்படியாக மாசி மாதம் 22 ஆம் தேதி மார்ச் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 7. 56 மணிக்கு பூரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் மீன ராசியில் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அவர் இடம் மாறினார். தற்பொழுது மார்ச் 21ஆம் தேதி சனி பகவான் தன்னுடைய நட்சத்திர பாதத்தை மாற்றுகிறார்.

இதனால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மை தீமை கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம்.

இன்று நடக்கும் சனியின் நட்சத்திர மாற்றம்.. 12 ராசிகளுக்கும் எப்படி இருக்க போகிறது? | 2026 March 21 Sani Natchathira Peyarchi Palangal

பங்குனி உத்திரம் அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

பங்குனி உத்திரம் அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

 

சனி பகவானின் இந்த நட்சத்திர மாற்றம் ரிஷபம், கன்னி, தனுசு ஆகிய ராசிகளின் மீது விழுவதால் இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோல் இந்த சனிப்பெயர்ச்சி சிம்ம ராசிக்கு அஷ்டமத்து சனியாகவும், தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனியாகவும் இருக்கிறது. இந்த நேரத்தில் மகர ராசிக்கு ஏழரை சனி முற்றிலும் விலகுகிறது. விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும் நீங்குகிறது. கும்ப ராசிக்கு குடும்ப சனியும் மீன ராசிக்கு ஜென்ம சனியும் கன்னி ராசிக்கு கண்டக சனியும் தொடங்குகிறது.

இன்று நடக்கும் சனியின் நட்சத்திர மாற்றம்.. 12 ராசிகளுக்கும் எப்படி இருக்க போகிறது? | 2026 March 21 Sani Natchathira Peyarchi Palangal 

பகவத் கீதைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் எங்கு இருக்கிறது தெரியுமா?

பகவத் கீதைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் எங்கு இருக்கிறது தெரியுமா?

மேலும் மேஷ ராசிக்கு விரய சனி விலகி ஏழரை சனி தொடங்குகிறது. இதனால் இவர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனியின் சஞ்சார காலங்களில் மூன்று முறை குரு பெயர்ச்சியும் நடக்க இருக்கிறது. அதேபோல் ராகு கேது பெயர்ச்சியும் நடக்க உள்ளது.இதனால் இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் சனி பகவானுடைய தாக்கத்திலிருந்து விடுபட அவர்கள் 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம். அதோடு “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்ற சனி மூல மந்திரத்தை பாராயணம் செய்வதும் ஒரு நல்ல மாற்றத்தை வாழ்க்கையில் கொடுக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US