2026: சனியின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த ராசிகளுக்கு விடிவு காலம் ஆரம்பம்
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் தங்களுடைய இடத்தை அவ்வப்பொழுது மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அந்த மாற்றமானது கட்டாயமாக 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் ஒரு தாக்கத்தை உண்டு செய்யும்.
அந்த வகையில் நவகிரகங்களில் நீதிபதியாக விளங்கக்கூடிய சனிபகவான் தற்பொழுது அவருடைய நட்சத்திரத்தை மாற்றுகிறார். வருகின்ற மார்ச் 21ஆம் தேதி மாலை 4 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அவர் பெயர்ச்சி அடைகிறார்.
சனி பகவான் மூன்றாவது பாதத்தில் அதாவது தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியானது நான்கு ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கப் போகிறது.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியானது பல வகையான நன்மைகளை அளிக்க போகிறது. மனநிலையில் ஒரு நல்ல தெளிவான மாற்றம் வரும். தொழில் ரீதியாக பின்னடைவு சந்தித்தவர்கள் முன்னோக்கி செல்லக்கூடிய அற்புதமான வாய்ப்பை உருவாக்கி கொடுக்கப் போகிறார்.
ஒரு சிலருக்கு அரசியலில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு உருவாகும். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகச் சிறந்த விளங்கக்கூடிய ஆற்றலை கொடுக்கப் போகிறார். அதிர்ஷ்டம் இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் நிச்சயம் ஏதாவது ஒரு வழியில் இருந்து வரும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு விரைவில் நீங்கள் ஒரு நற்செய்தியை கேட்பீர்கள். உழைப்பிற்கு ஏற்ற வெற்றி உங்களுக்கு இந்த காலகட்டத்தில் தேடி வரும். நீண்ட நாட்களாக உங்களுக்கு ஒரு சிறந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று மனம் வருத்தம் இருந்தால் அதற்கான ஒரு முழு அங்கீகாரத்தை இந்த காலகட்டம் உங்களுக்கு பெற்று கொடுக்கும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுகள் நல்ல முறையில் அமையும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டமானது இவர்களுக்கு எல்லா திசைகளில் இருந்தும் நன்மைகள் வந்து சேர போகிறது. நீண்ட நாட்களாக நிறைவேறாத கனவுகள் இந்த காலகட்டங்களில் நிறைவேறும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். தொழிலில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் தொலைதூர பயணம் செல்ல நேரலாம். ஒரு சிலருக்கு வெளிநாடுகளில் இருந்து வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |