2026 காமதா ஏகாதசி: விருப்பங்கள் நிறைவேற தானம் செய்யவேண்டிய 5 பொருட்கள்

By Sakthi Raj Mar 28, 2026 07:01 AM GMT
Report

 விரதங்களில் மிகவும் முக்கியமான மற்றும் சக்தி வாய்ந்த விரதமாக ஏகாதசி விரதம் இருக்கிறது. இந்த நாளில் நாம் விரதமிருந்து பெருமாளை வழிபாடு செய்தால் நம்முடைய பாவங்கள் விலகி புண்ணிய பலன்கள் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஏகாதசியும் நமக்கு ஒவ்வொரு விதமான பலனை தருகிறது.

அப்படியாக மார்ச் மாதத்தில் இரண்டாவதாக வரக்கூடிய ஏகாதசி காமதா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி மனிதருடைய விருப்பங்களை நிறைவேற்றி அவர்கள் வேண்டுவதை அருளக்கூடிய ஒரு ஏகாதசியாக இருக்கிறது. அப்படியாக இந்த ஆண்டு காமதா ஏகாதசி மார்ச் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.

அன்றைய தினம் அதிகாலை எழுந்து குளித்து மஞ்சள் நிற ஆடையை உடுத்தி விரதத்தை துவங்க வேண்டும். வீட்டில் உள்ள பெருமாள் படத்திற்கு மலர்களால் அலங்கரித்து தீபம், ஊதுபத்தி ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

2026 காமதா ஏகாதசி: விருப்பங்கள் நிறைவேற தானம் செய்யவேண்டிய 5 பொருட்கள் | 2026 March When Is Kamada Ekadashi Worship

இந்த திசையில் மனை வாங்கினால் கோடீஸ்வர யோகம் கிடைக்குமாம்

இந்த திசையில் மனை வாங்கினால் கோடீஸ்வர யோகம் கிடைக்குமாம்

பிறகு பெருமாளுக்கு பிடித்த மஞ்சள் நிற மலர்களை சாற்றி வழிபாடு செய்வது சிறப்பு. அன்றைய தினம் பெருமாளுக்கு உரிய மந்திரங்களை பாராயணம் செய்து மனதார வழிபாடு செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

மேலும், நாளை காமதா ஏகாதசி அன்று காலை 7. 28 மணி முதல் பூஜை செய்வதற்கான நல்ல நேரம் தொடங்குகிறது. அதேபோல் பகல் 12. 36 வரை அந்த பூஜைகளை செய்யலாம், காமதா ஏகாதசி நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய அற்புதமான நாள் என்பதால் ஏகாதசி என்று பூஜைகளை நிறைவு செய்த பிறகு அமைதியாக அமர்ந்து பெருமாளிடம் நம்முடைய வேண்டுதலை வைத்தால் நிச்சயம் அவர் வேண்டிய வரத்தை கொடுப்பார்.

2026 காமதா ஏகாதசி: விருப்பங்கள் நிறைவேற தானம் செய்யவேண்டிய 5 பொருட்கள் | 2026 March When Is Kamada Ekadashi Worship

உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் இந்த இடத்தில் இருந்தால் கட்டாயம் இது நடக்குமாம்

உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் இந்த இடத்தில் இருந்தால் கட்டாயம் இது நடக்குமாம்

அதோடு நம்முடைய வேண்டுதல் நிறைவேற குறிப்பிட்ட சில பொருட்களை தானம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

நாளைய தினம் முடிந்தவரை ஏழைகளுக்கு ஆடைகள் அல்லது அவர்களுக்கு தேவையான பொருட்களை தானமாக வழங்கலாம். பிறகு மஞ்சள், கொண்டை கடலை ஆடைகள், பழங்கள் என இந்த ஐந்து மங்களகரமான பொருட்களை நாம் ஒருவருக்கு தானம் செய்யும் பொழுது நம்முடைய பாவங்கள் விலகி பெருமாள் நம்முடைய விருப்பங்களை உடனடியாக நிறைவேற்றக்கூடிய அருளை வழங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US