வாஸ்து: வீடுகளில் இந்த பொருட்கள் இருந்தால் முதலில் அகற்றி விடுங்கள்
வாஸ்து என்பது நம் வீடுகளில் சரியான திசையில் அதற்குரிய பொருட்களை வைப்பது ஆகும். வாஸ்து சரியாக பின்பற்றாமல் ஒரு இடத்தில் அமரும் பொழுது நாம் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது.
அதாவது திடீர் என்று வீடுகளில் பொருள் இழப்பு, குடும்பத்தினர் இடையே சண்டை சுப காரிய நிகழ்ச்சிகளில் தடை போன்றவற்றை நாம் சந்திக்கின்றோம். அப்படியாக நாம் வாஸ்து ரீதியாக வீடுகளில் பழைய பொருட்கள் இருந்தால் அகற்றி விட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
அதாவது ஒரு சிலர் மிகவும் விருப்பத்தோடு மிகவும் பழமையான பொருட்களை பணம் கொடுத்து வாங்கி வீடுகளில் அழகு படுத்த வேண்டும் என்று வைத்திருப்பார்கள். ஆனால் அதை நாம் சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.
அதோடு நிறைய பழைய பொருட்கள் சேரும் பொழுது அவை வீடுகளில் எதிர்மறை ஆற்றலை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், வீடுகளை சுற்றி நாம் மரம் செடி வளர்க்கும் பொழுது அதை நாம் சரியான திசையில் வைக்க வேண்டும்.
ஈசானிய மூலையில் வேப்பமரம் இருந்தால் கட்டாயம் அந்த வீடுகளில் மகிழ்ச்சியான நிலை இருக்காது என்று சொல்கிறார்கள். அதேபோல் குடும்பத்தில் வாஸ்து ரீதியாக சரியான இடத்தில் மரம் வளர்க்கவில்லை என்றால் மிகப்பெரிய பாதிப்பு கொடுத்து விடும் என்று சொல்லப்படுகிறது.
அப்படியாக, இன்னும் வாஸ்து ரீதியாக நம்முடைய அன்றாட வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பல்வேறு வாஸ்து முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் சரவணா தேவி அவர்கள்.
அதைப் பற்றி பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |