2026: செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு பணமழை கொட்டும் காலமாம்
ஜோதிட ரீதியாக கிரகங்களுடைய ஒவ்வொரு நிலையும் மனிதர்களுடைய வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், கிரகங்கள் ஒன்றுக்கொன்று குறிப்பிட்ட நிலையில் அமையும் பொழுது சில நேரங்களில் சுபயோகங்கள் உண்டாகும். அந்த வகையில், தற்போது மிதுன ராசியில் செவ்வாய் பகவானும் துலாம் ராசியில் சுக்கிரனும் சஞ்சரித்து வருகிறார்கள்.
இந்த இரண்டு கிரகங்களின் நிலைகளுக்கு இடையே நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. அதாவது, இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஐந்து மற்றும் ஒன்பதாவது இடங்களில் அமைந்த தொடர்பு கொள்ளும் பொழுது இந்த நவபஞ்ச யோகம் உருவாகிறது.
இந்த யோகத்தால் எல்லா ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இந்த காலகட்டம் நிச்சயம் ஒரு பெரிய முன்னேற்றமாகவே அமையப் போகிறது.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நவபஞ்சம ராஜயோகமானது இவர்களுக்கு தொழில் மற்றும் வேலை தொடர்பாக நல்ல சாதகமான பலன் கொடுக்கப் போகிறது.
நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை வந்து சேரும். பதிவு உயர்வு நினைத்த சம்பள உயர்வு ஆகிய வாய்ப்புகள் உண்டு. புதிய நபர்களுடைய அறிமுகம் உங்களுக்கு ஒரு புதிய திருப்புமுனையாக அமையலாம்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக ஒரு நல்ல சாதகமான பலன் கொடுக்கப் போகிறது. நீண்ட காலமாக கைகளுக்கும் வராத பணம் வந்து சேரும்.
எதிர்பாராத வகையில் இவர்களுக்கு ஒரு நல்ல பொருளாதார முன்னேற்றம் உண்டு. உங்களுடைய திறமைக்கேற்ற வாய்ப்புகள் பெறுவீர்கள். வியாபார ரீதியாக வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிப்பதோடு நல்ல லாபமும் பெறுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இந்த நவப பஞ்சம ராஜயோகம் இவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குகிறது. வேலை ரீதியாக மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் நல்ல முடிவை பெற்றுக் கொடுக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
நீண்ட காலமாக வேலை தேடி வருபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். கடன் தொல்லை அடைவதற்கான சூழ்நிலையும் குடும்பத்தினருடைய முழு ஆதரவையும் இந்த காலகட்டங்களில் பெறுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |