2026: செவ்வாய் பெயர்ச்சியால் அடுத்த 45 நாட்களுக்கு அதிர்ஷடம் பெரும் ராசிகள்

By Sakthi Raj May 13, 2026 07:32 AM GMT
Report

ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் மங்களகரமான கிராமமாக அறியப்படுகிறார். இவர் தான்வீரம், துணிச்சல், ஆற்றல், தைரியம் ஆகியவற்றை குறிப்பிடுவதாக இருக்கிறார். இவர் மே 11 ஆம் தேதி பிற்பகல் 12:47 மணிக்கு அவரின் சொந்த ராசியான மேஷ ராசிக்கு இடம் மாறுகிறார். இதன் காரணமாக சில ராசிகளுக்கு சுபமான பலன்கள் கிடைக்கப் போகிறது.

இந்த காலகட்டங்களில் இவர்கள் வீடு நிலம் சொத்து வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும். அப்படியாக செவ்வாயின் இந்த மேஷ ராசி பெயர்ச்சி எந்த ராசியினருக்கு அடுத்த 45 நாட்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகள் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்.

உங்கள் ஜாதகத்தில் ராகு எந்த இடத்தில் இருக்கிறார்.. அதற்கான பலன் இதோ

உங்கள் ஜாதகத்தில் ராகு எந்த இடத்தில் இருக்கிறார்.. அதற்கான பலன் இதோ

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியானது இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய தன்மையை கொடுக்கப்போகிறது. எதையும் தீர ஆராய்ந்து யோசித்து நல்ல முடிவுகளை எடுக்கக் கூடிய அமைப்பு உருவாகும்.

குறிப்பாக நிலம், வீடு, சொத்து போன்ற பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதிலிருந்து விடுபடக்கூடிய காலமாக அமையப் போகிறது.

கடகம்:

கடகம் ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியானது இவர்களுக்கு எதையும் தைரியமாக முடிவெடுக்கக்கூடிய தன்மையை கொடுக்க போகிறது. நீண்ட நாட்கள் கடன் தொல்லையில் இருப்பவர்களுக்கு அதில் இருந்து விடுபடும் யோகம் கிடைக்கும்.

குடும்பத்தில உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். அதுமட்டுமல்லாமல் வீடு வாங்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பதற்கு நினைத்த இடத்திலிருந்து பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

மகர ராசியினர் இந்த ராசிகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்

மகர ராசியினர் இந்த ராசிகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் இந்த பெயர்ச்சியானது இவர்களுக்கு உயர் பதவியை தேடி கொடுக்க போகிறது. ஒரு சிலருக்கு இடம் மாற்றம் பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். குடும்பத்தில் விலகிச் செல்வார்கள் மீண்டும் வந்து பேசுவார்கள்.

மன தைரியத்தோடு எதிரிகளை நீங்கள் இந்த காலகட்டங்களில் போராடக்கூடிய ஜெய்க்கக்கூடிய வலிமை பிறக்கும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பூர்வீக இடங்களில் இருந்து வந்த பிரச்சனை விலகும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US