2026: சனி பகவானின் திடீர் மாற்றத்தால் உச்சத்தை தொடப்போகும் ராசிகள்

By Sakthi Raj May 06, 2026 06:01 AM GMT
Report

ஜோதிடத்தில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய ராசியாகவும் மனிதர்களுடைய கர்ம வினைகளை அகற்றக் கூடியவராகவும் சனி பகவான் இருக்கிறார். இதனால் இவருடைய தாக்கம் மிகப்பெரிய அளவில் 12 ராசிகளுக்கும் இருக்கிறது.

அப்படியாக, கடந்த மார்ச் மாதம் சனி பகவான் மீன ராசிக்கு இடம் மாறினார். அதனைத் தொடர்ந்து மே 16ஆம் தேதி சனி அமாவாசை அனுஷ்டிக்கப்படுகிறது. பிறகு, மே 17ஆம் தேதி சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார்.

இது ஒரு முக்கியமான ஜோதிடம் மாற்றமாக கருதப்படுகிறது. வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி மீன ராசியில் இருக்கக்கூடிய சனிபகவான் புதனின் ஆதிக்கத்தை கொண்ட ரேவதி நட்சத்திரத்திற்கு பயணம் செய்வது மிகப் பெரிய மாற்றத்தை கொடுக்ககூடும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த மாற்றம் குறிப்பிட்ட சில ஐந்து ராசிகளுக்கு பொருளாதார முன்னேற்றமும், வாழ்க்கையில் திடீர் திருப்பங்களை கொடுக்கூடும் என்று நம்பப்படுகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

2026: சனி பகவானின் திடீர் மாற்றத்தால் உச்சத்தை தொடப்போகும் ராசிகள் | 2026 May 16 Sani Revathi Nakshatara Peyarchi Palan

2026: மீன ராசியினருக்கு இந்த மே மாதம் எப்படி இருக்க போகிறது?

2026: மீன ராசியினருக்கு இந்த மே மாதம் எப்படி இருக்க போகிறது?

ரிஷபம்:

ரிஷப ராசியினருக்கு சனிபகவானுடைய இந்த ரேவதி நட்சத்திர மாற்றமானது இவர்களுக்கு பொருளாதாரத்தில் சந்தித்த நெருக்கடிகளில் இருந்து விடுதலை கொடுக்கப் போகிறது. குடும்ப வாழ்க்கையில் ஒற்றுமை நிலவும். அரசு வழியே நீங்கள் வேலைகள் முடிவிற்கு வரும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி ஒற்றுமை நிலவும்.

மிதுனம்:

மிதுன ராசியினருக்கு சனி பகவானின் இந்த ரேவதி நட்சத்திர மாற்றமானது இவர்களுக்கு சட்ட ரீதியான பிரச்சனைகளிலிருந்து விடுதலை கொடுக்க போகிறது. வேலை செய்யும் இடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெற்று முன்னேற்றம் அடையப்போகிறீர்கள். நீண்ட நாள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருந்துபவர்களுக்கு முழு அங்கீகாரம் கிடைக்கும்.

முருக பக்தர்களுக்கு ஏன் அதிக அளவில் சோதனை வருகிறது தெரியுமா?

முருக பக்தர்களுக்கு ஏன் அதிக அளவில் சோதனை வருகிறது தெரியுமா?

துலாம்:

துலாம் ராசியினருக்கு சனி பகவானின் இந்த ரேவதி நட்சத்திர பயணம் ஆனது இவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பை உயர்த்திக் கொடுக்கப் போகிறது. குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பீர்கள். ஒரு சிலருக்கு நினைத்த இடத்திற்கு ஆன்மீக பயணம் செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் நேர்மறையான சிந்தனையும் உங்களுக்கு முழு ஆதரவும் கிடைக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் ரேவதி நட்சத்திர பயணம் ஆனது இவர்களுக்கு எதையும் சமாளிக்க கூடிய திறனை கொடுக்கப் போகிறது. குடும்பத்தில் இவர்களை அவமதித்தவர்கள் முன்பாக இவர்கள் தலை நிமிர்ந்து வாழக்கூடிய யோகத்தை கொடுக்கும். பிள்ளைகள் வழியே உங்களுக்கு ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US