2026: வைகாசி அமாவாசை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்க போகிறது?

By Sakthi Raj May 14, 2026 09:02 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு வருகின்ற மே 17 ஆம் தேதி சனிக்கிழமை அன்று சக்தி வாய்ந்த அமாவாசை வருகிறது. மேலும், ஜோதிட ரீதியாக இது ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அப்படியாக, இந்த அமாவாசை ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான பலன்களைத் தரப்போகிறது. அந்த வகையில் 12 ராசிகளுக்கும் வைகாசி அமாவாசை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

2026: வைகாசி அமாவாசை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்க போகிறது? | 2026 May 17 Vaikasi Amavasai Astrology Prediction

2026: குருபெயர்ச்சி: எந்த ராசியினருக்கு அதிர்ஷடம்.. யார் பரிகாரம் செய்யவேண்டும்?

2026: குருபெயர்ச்சி: எந்த ராசியினருக்கு அதிர்ஷடம்.. யார் பரிகாரம் செய்யவேண்டும்?

மேஷம்:

இவர்கள் ராசியில் சனி மற்றும் செவ்வாய் இருப்பதால் அந்த வரம் முழுவதும் சற்று பெருமையாக எல்லா விஷயங்களையும் கையாள்வது அவசியம். முடிந்த வரை கோபத்தை தவிர்த்தால் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

ரிஷபம்:

இந்த வைகாசி அமாவாசை ரிஷபத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைய உள்ளது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தில் உங்களின் மரியாதை உயரும். வாழ்க்கையை பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும்.

மிதுனம்:

இந்த காலகட்டங்களில் உங்களின் கற்பனை திறன் வளரும். தொழில் ரீதியாக புதிய யோசனைகள் தோன்றும். நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள விஷயங்களை சரியாக முடிப்பீர்கள்.

கடகம்:

இந்த வைகாசி அமாவாசை உங்களுக்கு மன மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொடுக்க உள்ளது. உங்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்வீர்கள். உங்களை ஆசைகளை அடையும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.

சிம்மம்:

இந்த வைகாசி அமாவாசையில் நீங்கள் உங்களை சுற்றி உள்ள நபர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். யார் உங்களுக்கு சாதகமாக மற்றும் எதிராக செயல்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

கன்னி:

இந்த அமாவாசை உங்களை புதிய விஷயங்களை தேடி படிக்கச் செய்யும். வாழ்க்கையை பற்றிய புரிதல் மாறுபடும். புதிய மனிதர்களை சந்திப்பது மற்றும் அறிமுகம் கிடைக்கும்.

தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்த 8 வயது மாணவன் சாதனை

தலைகீழாக நின்று சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்த 8 வயது மாணவன் சாதனை

துலாம்:

நீங்கள் சமீப காலமாக கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆதலால் உங்களின் தொழில் மற்றும் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். செவ்வாய் உங்களை உயர் பதவிக்கு தயார் செய்துக் கொண்டு இருக்கிறார்.

விருச்சிகம்:

ஒருவரை முழுமையாக நம்பும் முன் நீங்கள் பலமுறை ஆலோசனை செய்வது அவசியம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வாழ்க்கையில் புதிய மாற்றமும் திருப்புமுனையாக அமையும்.

தனுசு:

இந்த காலகட்டம் உங்களின் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய மாற்றங்கள் சந்திப்பீர்கள். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உன்டு.

மகரம்:

உங்கள் காதல் உறவில் இருந்த சிக்கல் விலகும். முடிந்த வரை எந்த ஒரு விஷயத்தையும் உணர்வுபூர்வமாக எடுக்காதீர்கள். புதிய பொருட்கள் உங்களிடம் வந்து சேரும் காலம்.

கும்பம்:

இந்த காலகட்டம் உங்கள் வாழ்க்கை மிகவும் மெதுவாக நகர்வது போல் இருக்கலாம். உங்களின் ராஜதந்திரத்தால் குடும்ப வாழ்க்கையில் உள்ள சிக்கல் விலகும். வீட்டை புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

மீனம்:

உங்களை பற்றி சுயபரிசோதனை செய்வீர்கள். சுக்கிரனின் ஆற்றலால் நீங்கள் முன்னேறி செல்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் திடீர் மாற்றங்களை சந்திப்பீர்கள். பண வரவு தடையின்றி இருக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US