2026: யமனின் வக்ர பெயர்ச்சி மே மாதம் முதல் இவர்களின் வாழ்க்கையே போகிறதாம்
2026 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதியமன் என்று அழைக்கப்படும் புளூட்டோ கிரகம் தலைகீழாக அதாவது 163 நாட்களுக்கு வக்ர நிலைக்கு செல்கிறது. இதனால் ஒரு சில ராசிகளுக்கு பாதகமாக இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையையே செய்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியானது மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கப் போகிறது. நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த காரியம் நீங்க நினைத்தது போல் நிறைவேறும். நண்பர்கள் மத்தியில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை கொடுத்து முடிவெடுக்கக்கூடிய நிலை உண்டாகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியானது சிந்தனையிலும் முடிவெடுக்கும் திறனிலும் தெளிவை கொடுக்கப் போகிறது. ஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் எதிர்பாராத விதமாக அமையும். உங்களிடம் சண்டையிட்டு சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவதற்கான வாய்ப்புகள் உண்டு. வழக்கு விஷயங்களை மறுபரிசீலனை செய்வது அவசியம்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியானது இவர்களுக்கு நிலை தன்மையையும் முன்னேற்றத்தையும் வாழ்க்கையில் கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரமும் பெறப்போகிறார்கள். வாழ்க்கையில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தினர் முழு ஆதரவால் சில முக்கியமான விஷயங்களை சாதித்துக் கொள்வீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |