2026: மகர ராசியினர் மே மாதம் இந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டுமாம்

By Sakthi Raj May 02, 2026 08:57 AM GMT
Report

 ஜோதிடத்தில் ஒவ்வொரு மாதத்தில் நடக்கக்கூடிய கிரகங்களுடைய மாறுதல்கள் தான் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் திருப்பங்களை கொடுக்கிறது. அப்படியாக, சனிபகவானின் ஆதிக்கத்தை பெற்ற மகர ராசியினருக்கு மே மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். மே மாதம் மகர ராசிகளுக்கு ஓய்வின்றி வேலை பார்க்கக் கூடிய அமைப்பு உண்டாகும்.

இருப்பினும் உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். அதைப்போல் வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வாகன ஓட்டுனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அவர்களுடைய பணிகளில் ஈடுபடுவது அவசியம். பணம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக கொடுக்கல் வாங்கலில் எத்தனை பணத்தாள்கள் இருக்கிறது என்பதை எண்ணி பார்த்து கொடுப்பது அவசியம். மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்ற திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதை இந்த மாதம் தள்ளி வைப்பது நல்லது.

பூமியில் இருந்து வைகுண்டம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது.. எப்படி செல்வது தெரியுமா?

பூமியில் இருந்து வைகுண்டம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது.. எப்படி செல்வது தெரியுமா?

இந்த மாதத்தில் பணத்தை கொடுத்து வெளிநாடு பயணம் சென்று படிப்பதற்கு ஏற்ற எந்த ஒரு வேலையையும் செய்யாமல் இருப்பது நன்மை கொடுக்கும். அதைப்போல் இந்த மாதத்தில் வீடு, நிலம் வாங்குவது விற்பது போன்ற எந்த செயல்களிலும் ஈடுபடாமல் இருப்பது உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

இந்த மாதத்தில் மகர ராசிக்கு எது கை கொடுக்கும் என்றால் தொழில் ரீதியாக இவர்கள் முதலீடுகள் செய்யலாம். அதை விரிவாக்கம் செய்வதற்கான வேலையில் ஈடுபடலாம் வங்கிகளில் சேமிப்பு கணக்குகளை துவங்கலாம்.

அதேபோல் குழந்தை பேருக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த மாதத்தை தவிர்த்து அடுத்த மாதத்தில் சிகிச்சை மேற்கொண்டால் அதிர்ஷ்டமான பலன்களை பெறலாம். மேலும், மகர ராசியினருக்கு மே மாதம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிவித்துக் கொள்வோம்.


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US