2026: ரிஷப ராசியில் குரு சூரியன் சேர்க்கை.. ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள் யார்

By Sakthi Raj May 01, 2026 08:56 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களுடைய மாற்றங்கள் தான் நம்முடைய வாழ்க்கையில் அன்றாட மாறுதல்களை கொடுக்கிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு மே மாதம் முக்கியமான ஜோதிட நிகழ்வு நடக்க இருக்கிறது.

அதாவது நவகிரகங்களில் தலைமை கிரகமாக விளங்கக்கூடிய சூரிய பகவான் ஞான காரகனாக விளங்கக்கூடிய குருபகவானும் ரிஷப ராசியில் இணைகிறார்கள். இந்த அரிய சேர்க்கை குரு ஆதித்ய யோகத்தை உருவாக்குறது.

இந்த யோகமானது குறிப்பாக அரசு துறையில் வேலை செய்பவர்களுக்கும் பொருளாதார மற்றும் நிர்வாகத் துறையில் இருப்பவர்களுக்கும் நற்பலன்களை கொடுக்கப் போகிறது. மேலும், இந்த சேர்க்கையால் எந்த ராசியினருக்கு மிகப்பெரிய அளவில் ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று பார்ப்போம்.

2026: ரிஷப ராசியில் குரு சூரியன் சேர்க்கை.. ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள் யார் | 2026 May Sun Jupiter Conjuction Guru Aditya Yoga

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த இணைவு இவர்களுக்கு ஆளுமை திறனை பல மடங்கு அதிகரிக்க போகிறது. நீண்ட நாட்கள் மனதில் இருந்து வந்த கனவுகள் நிறைவேறும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாக கூடிய காலமாகும். உங்களுடைய பேச்சுத்திறனால் நினைத்ததை சாதிப்பீர்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த இணைவு இவர்களுக்கு திருமண வரன் பெற்றுக்கொடுக்கப் போகிறது. வேலை தொடர்பாக வெளிநாடு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் திறக்கும். வீடுகளில் பெரியவர்களின் முழு ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். பூர்விக சொத்துக்கள் கைகளுக்கு கிடைக்கக்கூடிய காலம் ஆகும்.

உங்களுக்கான கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் தேவதை எண் என்ன தெரியுமா?

உங்களுக்கான கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் தேவதை எண் என்ன தெரியுமா?

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த இணைவானது இவர்களுக்கு புதிய வீடு அல்லது நிலம் வாங்கக்கூடிய யோகத்தை கொடுக்கப் போகிறது. மாணவர்களுக்கு நினைத்த இடத்தில் படிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்களுக்கு மிகச்சிறந்த பொற்காலம். பிள்ளைகள் வழியே மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். திட்டமிட்ட வேலையை நினைத்தது போல் செய்து முடிப்பீர்கள்.    

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US