2026: நவராத்திரி கொலு, கலசம் வைப்பதற்கு உகந்த நேரம் என்ன?
இந்தியாவில் கொண்டாட கூடிய முக்கியமான பண்டிகைகளில் நவராத்திரியும் ஒன்று. "நவம்" என்றால் 9 மட்டுமல்ல, புதுமை என்றும் ஒரு அர்த்தம் உண்டு.
மேலும், நவராத்திரி என்றால் வழக்கமான இரவுகளைப் போல் இல்லாமல் ஒரு நல்ல சக்தி நிறைந்த ஆற்றல் கொண்ட இரவாகவும் ஒன்பது நாட்களை கொண்டாடி வருகின்றோம். மற்ற விழாக்களை நாம் பகலில் தான் கொண்டாடுவோம்.
ஆனால், சிவனுடைய சிவராத்திரி மற்றும் அம்பாளுக்குரிய நவராத்திரியை நம் இரவில் கொண்டாடுகிறோம், காரணம் இரவு நேரம் என்பது அனைத்து உயிர்களும் பரம் பொருளுக்குள் ஒடுங்கும் நேரமாக கருதப்படுகிறது,
அந்த வகையில், அம்பாளுடைய அருளை பெறுவதற்கு இந்த நவராத்திரி மிகவும் உகந்த நாட்களாக இருக்கிறது. அப்படியாக, நவராத்திரி கொண்டாடும் வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

நவராத்திரி வழிபாட்டு வகைகள் :
இந்த நவராத்திரி என்பது நான்கு விதமாக அம்பிகையை வழிபாடு செய்யலாம். ஒன்று கொலுவைத்து வழிபாடு செய்யலாம், கலசம் வைத்து வழிபாடு செய்யலாம், படம் வைத்து வழிபாடு செய்யலாம், அகண்ட தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம். ஒவ்வொருவர் குடும்பத்திற்கு ஏற்ற வழக்கம் கொண்டு நாம் அந்த முறையில் வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.
1. கொலு வைத்து வழிபடும் முறை:
இந்த நவராத்திரியில் மிக முக்கியமான வழிமுறைகளில் கொலு வைத்து வழிபாடு செய்வது ஒன்று. முதல் முறையாக கொலு வைப்பவர்கள் மூன்று படிகளில் இருந்து வைக்க துவங்கலாம். குறைந்தபட்சமாக மூன்று படிகளும் அதிகபட்சமாக 11 படிகளும் வைக்கலாம்.கொலு படிகள் அமைத்து அவற்றில் பொம்மைகளை அடுக்கி அம்பாளை எழுந்தருள செய்து வழிபாடு செய்யலாம்.
2. கலசம் அமைத்து வழிபடும் முறை:
பூஜை அறையில் ஒரு மனை பலகையில் சிவப்பு பச்சை அல்லது மஞ்சள் நிற துணியை உரித்து அதன் மேல் இலை அல்லது தாம்பாலத்தில் அரிசி அல்லது நெய் பரப்பி அதன் மீது கலசம் வைத்து வழிபாடு செய்யலாம். கலசத்திற்குள் தண்ணீர் அல்லது அரிசி நிரப்பி வழிபாடு செய்யலாம்.
3. படம் வைத்து வழிபடும் முறை:
வீடுகளில் இருக்கக்கூடிய ஏதேனும் ஒரு அம்பிகை திருவுருவப்படத்தை எடுத்துக்கொண்டு மனப்பலகைகள் ஒரு துணியை விரித்து அதன் மீது எழுந்தருள செய்து அந்த படத்திற்கு தினமும் அலங்காரம் செய்து வழிபாட மேற்கொள்ளலாம்.
4. அகண்ட தீபம் ஏற்றி வழிபடும் முறை:
அகலமான சட்டி போன்ற மண் விளக்கை எடுத்துக் கொண்டு அதை முதல் நாள் தண்ணீரில் நன்றாக ஊற வைத்து மறுநாள் எடுத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அந்த விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். பிறகு அதில் நீளமான சற்று தடிமானமான திரையைப் போட்டு விளக்கேற்றி அந்த தீபத்தை நவராத்திரி ஒன்பது நாட்களும் வீட்டில் எரிய செய்வது என்பது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

வழிபாட்டு முறைகள் :
மேற்கண்ட சொன்ன எந்த முறையிலும் நவராத்திரியை கொண்டாடலாம். மேலும், நவராத்திரி ஒன்பது நாட்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் நெய்வேத்தியம் படைத்து பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
காலையில் எளிமையாக வெற்றிலை வாழைப்பழம் மட்டும் வைத்து வழிபாடு செய்யலாம். காலை நேரங்களில் எளிமையாக வெற்றிலை வாழைப்பழம் மட்டும் வைத்து வழிபாடு செய்யலாம். மாலை நேரங்களில் சுண்டல் அல்லது சர்க்கரை பொங்கலை வைத்து வழிபாடு செய்யலாம்.
நவராத்திரி 2026 கொலு, கலசம், அகண்ட தீபம் ஏற்றி வழிபாட்டினை துவக்குவதற்கான நல்ல நேரம்:
நவராத்திரி 2026 துவங்கும் நாள்: அக்டோபர் 11 ஞாயிறு
கொலு பொம்மைகள் அடுக்கும் நாள்: அக்டோபர் 10 சனி அல்லது அக்டோபர் 11 காலை
கொலு அடுக்குவதற்கான நேரம் : அக்டோபர் 10 காலை 06.00 - 08.45 அல்லது 10.45- 12.00 அக்டோபர் 11 காலை 06.00 - 08.00
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |