சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு வரை ராஜயோகத்துடன் வாழப்போகும் ராசிகள் யார்?
ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். அப்படியாக சுக்கிரனுடைய இடமாற்றம் கண்டிப்பாக 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும். அதாவது சுக்கிர பகவான் முப்பது நாட்களுக்கு ஒரு முறை அவருடைய ராசியை மாற்றுகிறார்.
சுக்கிரன் நவம்பர் 22 ஆம் தேதியான இன்று மாலை 5.38 மணிக்கு துலாம் ராசியில் பெயர்ச்சி ஆகிறார். 2027 ஜனவரி ஒன்றாம் தேதி வரை அவர் துலாம் ராசியிலே பயணம் செய்கிறார். இந்த கால மாற்றத்தால் எந்த ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளைக் கொண்டு வந்து சேர்க்கப் போகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

விருச்சிகம்:
சுக்கிரன் இடமாற்றமானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொருளாதாரத்தில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வந்து சேர்க்கப்போகிறது. நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். செயல்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வித்தியாசமான பொருட்களை வாங்கி மகிழக்கூடிய ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் இவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் முற்றிலும் விலகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். அதனை நோக்கி பயணம் செய்வீர்கள்.
துலாம் :
துலாம் ராசிக்கு சுக்கிரனுடைய இந்த இடமாற்றம் ஆனது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமான பலனை கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. மனதளவில் இவர்களுக்கு தெளிவு பிறக்கும்.
குடும்பத்தில் மிகுந்த ஆதரவு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம்இருக்கும். தொலைத்த பொருட்களை மீட்டெடுப்பீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்கும் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கல்வியில் முன்னேற்றமும் தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்திகளும் வந்து சேரும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானுடைய இந்த இடமாற்றம் ஆனது இவர்களுக்கு குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளை தடையின்றி நடத்தி கொடுக்கப் போகிறது. தனிப்பட்ட தேவைகளை சரியாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரங்களில் இருந்து வந்த போட்டிகள் விலகும். தேவை இல்லாத செலவுகள் குறையும். திடீர் பயண வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் அவ்வப்பொழுது சிறு சிறு வாக்குவாதங்கள் வந்து மறைந்தாலும் பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லாமல் மகிழ்ச்சியான நிலை காணப்படும்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.