2026 அக்டோபர்: அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க வரும் கஜகேசரி ராஜயோகம்..

By Sakthi Raj Sep 29, 2026 07:22 AM GMT
Report

  ஜோதிட சாஸ்திரத்தில் கஜகேசரி ராஜயோகம் என்பது மிகவும் மங்களகரமான யோகமாகவே பார்க்கப்படுகிறது. ஜோதிடத்தில் சந்திர பகவான் ஒருவருடைய மனநிலையை குறிக்கக்கூடியவர். அந்த வகையில், சந்திரனின் சஞ்சாரம் மிகவும் வேகமானது.

அவர் இரண்டரை நாட்களுக்கு ஒரு முறை அவருடைய ராசியை மாற்றுகிறார். அந்த வகையில், அக்டோபர் மாத தொடக்கத்தில் சந்திர பகவான் அவருடைய சொந்த ராசியான கடக ராசிக்குள் நுழைகிறார்.

அங்கு குரு பகவான் ஏற்கனவே உச்ச நிலையில் இருக்கிறார். ஆதலால், குருவுடன் சந்திரன் சேரும்பொழுது கஜகேஸ்வரி ராஜயோகம் உருவாகிறது. இதனால் எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.

2026 அக்டோபர்: அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க வரும் கஜகேசரி ராஜயோகம்.. | 2026 Oct 4 Jupiter Moon Conjuction Prediction

பாவங்கள் யாரையும் சும்மா விடாது.. மகாபாரதம் உணர்த்தும் 5 கசப்பான உண்மைகள்

பாவங்கள் யாரையும் சும்மா விடாது.. மகாபாரதம் உணர்த்தும் 5 கசப்பான உண்மைகள்

மேஷம்:

இவர்களுக்கு கஜகேசரி ராஜ யோகம் குடும்பம் மற்றும் சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வீடு நிலம் வாங்கக்கூடிய யோகம் பெறுவார்கள். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். குடும்பத்தில் மன அமைதி மனதளவில் நிம்மதி பிறக்கும். நெருங்கியவர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் விலகும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் இவர்களுக்கு தன்னம்பிக்கையையும் முயற்சிகளில் வெற்றியையும் கொடுக்கும். வேலை செய்யும் இடங்களில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் முக்கிய தொடர்புகளின் ஒப்பந்தங்கள் வழியாக நல்ல லாபம் கிடைக்கும். சகோதரர் மற்றும் நெருங்கிய உறவினர்களுடைய உதவியை இந்த காலகட்டங்களில் இவர்கள் பெறுவார்கள்.

மகரம்:

மகர ராசியினருக்கு கஜகேசி ராஜயோகம் ஆனது இவர்களுக்கு தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். ஏழாம் வீட்டில் குரு மற்றும் சந்திர பகவான் இணைவதால் இவர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலகட்டமாக அமையப்போகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் இவர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US