ராகு தோஷம் என்றால் என்ன? இது தெரிஞ்சா உங்கள் வாழ்க்கையே மாறும்

By Sakthi Raj Sep 29, 2026 06:15 AM GMT
Report

ஜோதிடத்தில் ராகு தோஷம் என்பது பலரும் பயப்பட கூடிய ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ராகு தோஷம் என்றால் என்ன? ராகு தோஷம் இருப்பவர்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ராகு என்பது மாயை கிரகமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ராகு பிற கிரகங்களுடன் இணையும் பொழுது அதனுடைய வெளிப்பாடுகள் மாறுபடுகிறது.

அப்படியாக, ராகு பகவான் சூரியனுடன் இணைந்து செயல்படுகின்ற பொழுது அவர்களுக்கு அரசு சார்ந்த சிக்கல் அபராதங்கள், அதிகாரப்பூர்வமான அனுமதி பெறுவதில் சில தாமதங்கள் வரலாம்.

அதே போல், வாழ்க்கையில் நிலையற்ற தன்மையை கொடுக்கக்கூடியதாக சந்திரன் ராகு இருக்கிறது. ஆனால், இவர்களுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வேலை பார்க்கக் கூடிய யோகம் கிடைக்கும்.

ராகு தோஷம் என்றால் என்ன? இது தெரிஞ்சா உங்கள் வாழ்க்கையே மாறும் | What Is Raghu Dosha And Remedies For It

2026 அக்டோபர்: தனுசு ராசிக்கு எப்படி இருக்க போகிறது? எதில் கவனம் வேண்டும்

2026 அக்டோபர்: தனுசு ராசிக்கு எப்படி இருக்க போகிறது? எதில் கவனம் வேண்டும்

செவ்வாயுடன் ராகு சேர்ந்திருக்கின்ற பொழுது அவர்களுக்கு வாழ்க்கை பாதையில் எப்பொழுதும் குழப்பம், வேலை அல்லது அடிக்கடி வீடு மாறக்கூடிய நிலை தொழில் ரீதியாக நிறைய போராட்டங்களை சந்திப்பார்கள், புதன் மற்றும் ராகு பகவான் சேர்ந்திருக்கும் பொழுது அவர்களுக்கு மீடியா மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் போன்ற துறைகளில் மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கிறது.

ஒருவருக்கு குரு ராகு சேர்ந்திருக்கின்ற பொழுது அவர்களுக்கு பாரம்பரியமான சில விஷயங்களை பின்பற்றுவதில் தடைகள் மற்றும் குலதெய்வம் குறித்த ஒரு நல்ல தெளிவு இல்லாத ஒரு நிலையில் உருவாக்கி வருகிறது.

ராகு தோஷம் என்றால் என்ன? இது தெரிஞ்சா உங்கள் வாழ்க்கையே மாறும் | What Is Raghu Dosha And Remedies For It

மகாபாரதம்: கிருஷ்ணர் மௌனம் காத்த 3 தருணங்கள்.. உணர்த்தும் உண்மை என்ன?

மகாபாரதம்: கிருஷ்ணர் மௌனம் காத்த 3 தருணங்கள்.. உணர்த்தும் உண்மை என்ன?

சுக்கிரன் ராகு சேர்ந்திருக்கும் பொழுது அவர்களுக்கு நிறைய பொருள் வசதியும் எதிர்பாராத அங்கீகாரமும் கிடைத்தாலும் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களை சந்தித்து விடுகிறார்கள்.

ஒருவர் ஜாதகத்தில் சனி ராகு சேர்ந்திருக்கும் பொழுது அவர்களுக்கு தொழில் ரீதியாக வழக்குகள் மற்றும் வீடு தொடர்பான வாஸ்து குறைபாடுகள் வருகிறது. ராகுவினால் பாதிப்புகள் மற்றும் தோஷம் இருக்கும் என்றால் அவர்கள் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் போன்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று வருவது எல்லாம் உங்களுக்கு நற்பலன்களை கொடுக்கும். மேலும், ராகு தொடர்பான பல்வேறு தகவல்களை காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US