2026: குருவின் ரெட்டை பெயர்ச்சி: கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள் யார்?
ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த கிரகமாக குரு பகவான் இருக்கிறார். குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒரு முறை அவருடைய ராசியை மாற்றுகிறார். அந்த இடமாற்றமானது நிச்சயம் 12 ராசிகள் வாழ்க்கையிலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில், அக்டோபர் மாதம் இறுதியில் குரு பகவான் உடைய இரட்டைப் பெயர்ச்சி நடக்கிறது. அக்டோபர் 31ஆம் தேதி குரு பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார். மேலும், குருபகவான் அக்டோபர் 31ஆம் தேதி மக நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகிறார்.
குரு பகவான் ஒரே நாளில் தன்னுடைய நட்சத்திரம் மற்றும் ராசியை மாற்றுவது ஒரு சிலர் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் செல்வ செழிப்பை கொடுக்கப் போகிறது. அவை எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

மேஷம்:
குரு பகவானின் இரட்டைப் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் ஆகியவற்றை கொண்டு வந்து சேர்க்கப் போகிறது. இவர்கள் நினைத்த காரியங்கள் இந்த காலகட்டங்களில் நிறைவேறும்.
நீண்ட நாட்களாக முடிவுக்கு வராத வேலை நல்லபடியாக முடியும். விவசாய பணிகளில் உங்களுக்கு சாதகமான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு குரு பகவானுடைய இந்த இடமாற்றமானது இவர்களுக்கு பொருளாதார நிலையில் நல்ல உயரத்தை கொண்டு வந்து சேர்க்கப்போகிறது.
நினைத்த காரியங்கள் எல்லாம் கைக்கூடி வரும். குடும்பத்தில் சிறுசிறு விவாதங்கள் அவ்வப்போது தோன்றி மறையலாம். பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. பழக்க வழக்கங்களில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருபகவானுடைய இந்த நேர்மறையான ஆற்றலானது இவர்களுக்கு வாழ்க்கையில் இருந்த சிறு சிறு பிரச்சனைகளை நல்ல முடிவுக்கு கொண்டுவந்து சேர்க்க போகிறது. வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு கூடுதல் பொறுப்பு வந்து சேரும்.
உயர் அதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உங்களுடைய நிதானமான பேச்சுக்களால் சுற்றி உள்ளவர்களிடம் மதிப்பை பெறுவீர்கள். விரும்பிய உணவுகளை சாப்பிட்டு மகிழ்வீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |