2026: அக்டோபர் 31ல் குரு கேது சேர்க்கை.. பொருளாதார வளர்ச்சியை சந்திக்கும் ராசிகள் யார்?

By Sakthi Raj Oct 22, 2026 10:12 AM GMT
Report

 ஜோதிடத்தில் குரு பகவான் அறிவு செல்வம் ஞானம் போன்ற நற்பண்புகளுக்கு காரணியாக இருக்கிறார். அதே சமயம், கேது ஒரு நிழல் கிரகமாகவும் ஆன்மீக சிந்தனையை தூண்டக்கூடியதாகவும் உள்ளார். அந்த வகையில், குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி 12.02 மணிக்கு சிம்ம ராசியில் பெயர்ச்சியாகிறார்.

அங்கு ஏற்கனவே சஞ்சாரம் செய்யக்கூடிய கேது குருவுடன் இணையக்கூடிய நிகழ்வு நடக்க இருக்கிறது. இதனால் சமுதாயத்தில் நற்பெயர் பொருளாதார முன்னேற்றம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஒரு சில ராசிகள் பெறப்போகிறார்கள். அந்த ராசிகள் யார் என்று பார்ப்போம்.

2026: அக்டோபர் 31ல் குரு கேது சேர்க்கை.. பொருளாதார வளர்ச்சியை சந்திக்கும் ராசிகள் யார்? | 2026 October 31 Jupiter Ketu Conjunction Palangal

ஜோதிடம்: அடுத்த ஆறு மாதத்திற்கு மழையால் ஆபத்து காத்திருக்கிறதாம்

ஜோதிடம்: அடுத்த ஆறு மாதத்திற்கு மழையால் ஆபத்து காத்திருக்கிறதாம்

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் கேது பகவானுடைய சேர்க்கையானது இவர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமைவதால் வருமானம் உயர்த்துவதற்கான புதிய வழிகளை தெரிந்து கொள்வீர்கள்.

நீண்ட காலமாக நிலுவையில் இருக்கக்கூடிய பிரச்சனை நல்ல முடிவை பெறும். உங்கள் கைகளுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். வேலை செய்யும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு தனஸ்தானத்தில் குரு மற்றும் கேது இணைந்த நிலை இவர்களுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய அளவில் நன்மைகள் கொண்டுவந்து சேர்க்க போகிறது. வருமானம் உயர்த்துவதற்கான புதிய வழிகளை கண்டறிவீர்கள்.

வேலை செய்யும் இடங்களில் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் செய்யக்கூடிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுக் கொடுக்கும்.

மகாபாரதம்: சகாதேவனுக்கு ஜோதிட ஞானம் எப்படி கிடைத்தது என்று ரகசியம் தெரியுமா

மகாபாரதம்: சகாதேவனுக்கு ஜோதிட ஞானம் எப்படி கிடைத்தது என்று ரகசியம் தெரியுமா

சிம்மம்:

சிம்ம ராசியில் குரு மற்றும் கேது இணைந்திருப்பது இவர்களுக்கு ஒரு முக்கியமான அமைப்பாக உள்ளது. பல்வேறு விதத்தில் சிறந்த பலன்களை இவர்கள் பெறப்போகிறார்கள்.

வேலை செய்யும் இடங்களில் புதிய திட்டங்கள் இவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களுடைய பொறுப்புகள் அதிகரித்தாலும் அதை சரியான விதத்தில் பயன்படுத்துவது முக்கியமாக இருக்கிறது.     

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US