2026 அக்டோபர்: நீசபங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெற போகும் மேஷ ராசியினர்

By Sakthi Raj Sep 19, 2026 09:55 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மேஷ ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். இவர்களுக்கு இந்த மாதம் வீடு, நிலம் மற்றும் கார் வாங்குவதற்கான மிகச் சிறந்த வாய்ப்புகள் தேடி வரும். அரசு வேலை தேடுபவர்களுகும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கக் கூடிய மாணவர்களுக்கும் மிகச்சிறந்த பலன்கள் கிடைக்கும்.

அதைப்போல், ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய திட்டங்களை துவங்குவதற்கும் இது மிகச் சிறந்த ஏற்ற நாளாகும். மேலும், செவ்வாய் மற்றும் குருவின் நீசபங்க ராஜயோகம் மற்றும் சூரியன் சுக்கிரன் அமைப்புகள் இந்த மாதத்தில் இவர்களுடைய வெற்றியை மிகப்பெரிய அளவில் கொண்டு வந்து சேர்க்கப்போகிறது.

இருப்பினும் ஏழாம் இடத்தில் கிரகங்களினுடைய சேர்க்கையால் வாழ்க்கை துணை உடன் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

2026: கன்னியில் சூரியன்: புரட்டாசி மாதத்தில் பண மழையில் நனைய போகும் ராசிகள் யார்?

2026: கன்னியில் சூரியன்: புரட்டாசி மாதத்தில் பண மழையில் நனைய போகும் ராசிகள் யார்?

அதோடு, குழந்தை பாக்கியத்திற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த மாதம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

வெளிநாடு செல்ல விசாவிற்காக தவறான நண்பர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதிலும் கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் அக்டோபர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் மிகவும் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

அமைதி காப்பதும் நல்லது. இவர்கள் இந்த மாதம் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் பாராயணம் செய்யலாம். செவ்வாய் மற்றும் சூரிய பகவானுடைய பலம் பெற முருகப்பெருமானையும் சூரிய பகவான் வழிபாடு செய்வது சிறப்பு பலனை பெற்றுக் கொடுக்கும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US