2026 அக்டோபர்: தனுசு ராசிக்கு எப்படி இருக்க போகிறது? எதில் கவனம் வேண்டும்
2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனுசு ராசியினருக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம். அக்டோபர் மாதம் இருபதாம் தேதிக்கு பிறகு குரு பகவான் ஒன்பதாம் இடத்திற்கு அதாவது பாகிஸ்தானத்திற்கு மாறுவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமான சூழலாக இருக்க போகிறது.
சூரியன் நீசம் அடைவதால் இந்த மாதம் இவர்களுடைய தந்தையின் உடல் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ பரிசோதனைகள் எதுவாக இருந்தாலும் தள்ளிப் போடுவதை தவிர்க்க வேண்டும். தொழில் செய்பவர்களுக்கு இந்த காலகட்டம் ஒரு சிறப்பாக அமையப்போகிறது.
10 ஆம் இடத்தை சனி பகவான் பார்ப்பதால் உங்களுக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கலாம். ஆனால், மருத்துவத்துறையில் இருப்பவர்கள் முதலீடுகளில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தை பாக்கியம் பெற நினைப்பவர்கள் முருகப்பெருமானுடைய மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.
அக்டோபர் 27ஆம் தேதி சிவபெருமானுக்கு நடைபெறக்கூடிய அன்னாபிஷேகத்தை தவறவிடாமல் இருப்பது நல்லது. மேலும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் எந்த ஒரு திட்டத்தையும் வைத்துக் கொள்ளாதீர்கள். அக்டோபர் ஐந்து மற்றும் ஆறாம் தேதிகளில் மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதா கவனமாக இருக்க வேண்டும்.