இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு சிக்கலான திருமண வாழ்க்கை அமையுமாம்
ஜோதிடம் இன்று எடுத்துக் கொள்கின்ற பொழுது நாம் ஒவ்வொரு கிரக அமைப்புகளைக் கொண்டு நம்முடைய திருமண வாழ்க்கையை தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், ஒரு சிலருக்கு பொருந்தாத வாழ்க்கைத் துணை அமைந்து விடுவார்கள்.
அந்த வாழ்க்கை துணையால் அவர்களுக்கு எப்பொழுதும் பிரச்சனை மனக்கசப்புகள் வந்து கொண்டே இருக்கும், இதற்கு ஜாதக ரீதியாகவும் கிரகங்களின் உடைய அமைப்பு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

அந்த வகையில் கணவன் மனைவி இருவருடைய ஜாதகத்திலும் லக்கினத்திற்கு இரண்டு மற்றும் ஏழாம் இடங்களுக்கு செவ்வாய் ராகு, செவ்வாய் கேது சுக்கிரன் ராகு, சுக்கிரன் கேது செவ்வாய் சூரியன் போன்ற கிரகங்களுடைய தொடர்பு கிடைத்து இருந்தால் அந்த ஜாதகர்களுக்கு ஒரு பொருத்தம் இல்லாத வாழ்க்கையை துணையும் ஒரு சிக்கலான திருமண வாழ்க்கையும் அமையும்.
அவர்களுக்கு எப்பொழுதும் ஒரு கசப்பான சூழ்நிலையும் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையும் இல்லாத ஒரு நிலையை பார்க்கலாம்.
போராட்டமான வாழ்க்கையாகவே அவர்கள் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இருப்பினும் அதை சமாளிக்கும் திறன் வளர்ந்து விடும். சற்று பொறுமை காத்தல் இவர்களுக்கு அவசியம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |