மகாளய பட்சத்தில் 15 நாட்களும் தர்ப்பணம் கொடுப்பது ஏன்? கடைபிடிக்க வேண்டிய 8 விதிகள்

By Sakthi Raj Sep 27, 2026 07:45 AM GMT
Report

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய பட்சம் என்பது முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு உரிய சிறந்த நாளாகும். இந்த 15 நாட்களும் சூரியன் உதயம் ஆன பிறகு சூரியனையும் சாட்சியாக கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்று நம்முடைய சாஸ்திரங்கள் சொல்கிறது.

எல்லா மாதங்களிலும் வரக்கூடிய அமாவாசை நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு மிக சிறந்த நாள் என்றாலும் வருடத்தில் ஒருமுறை புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய பட்ச காலத்தில் மட்டும் எதற்காக 15 நாட்களும் முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

மகாளய பட்ச காலம் என்பது நம்முடைய முன்னோர்களுக்கு மட்டும் தர்ப்பணம் கொடுக்கக்கூடிய காலம் கிடையாது. நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத நமக்கு முன் வாழ்ந்த தலைமுறை முன்னோர்களுக்கும் சேர்ந்து தர்ப்பணம் கொடுக்கக்கூடிய காலம்.

மகாளய பட்சத்தில் 15 நாட்களும் தர்ப்பணம் கொடுப்பது ஏன்? கடைபிடிக்க வேண்டிய 8 விதிகள் | Purattasi Mahalaya Paksham 15 Days Worship

2026: அக்டோபர் முதல் குபேரனுடைய ஆட்டம் ஆரம்பமாகிறது.. எந்த ராசிகளுக்கு பணம் கொட்ட போகிறது?

2026: அக்டோபர் முதல் குபேரனுடைய ஆட்டம் ஆரம்பமாகிறது.. எந்த ராசிகளுக்கு பணம் கொட்ட போகிறது?

அது மட்டும் அல்லாமல் நண்பர்கள், உடன் பழகியவர்கள், மனிதர்கள் அல்லாத உயிர்களுக்கும் அவர்களுடைய ஆன்மா நற்கதி அடைய வேண்டும் என்று வேண்டி தர்ப்பணம் கொடுப்பதற்கான காலமாகும்.

இவ்வாறு கொடுக்கின்ற பொழுது நமக்கு முன்னோர்களுடைய ஆசிர்வாதமும் அந்த நபர்களுக்குஆன்மா sஷாந்தி அடைகிறது என்று சொல்லப்படுகிறது.

மகாளய பட்ச விதிகள்:

தாய் அல்லது தந்தை அல்லது இருவரும் இல்லாத ஆண்கள் மனைவியை இழந்த ஆண்கள் தர்ப்பணம் கொடுக்கலாம். பெற்றோர்கள் உயிரோடு இருந்தாலும் குழந்தைகள் இழந்தவர்களும் தர்ப்பணம் கொடுக்கலாம்.

அனைத்து நாட்களிலும் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் தினமும் சூரிய உதயத்திற்கு பிறகு வீட்டிலேயே தங்களின் முன்னோர்களின் நினைத்து எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபடலாம்.

மகாளய பட்சத்தில் 15 நாட்களும் தர்ப்பணம் கொடுப்பது ஏன்? கடைபிடிக்க வேண்டிய 8 விதிகள் | Purattasi Mahalaya Paksham 15 Days Worship

ஜோதிடம்: குழந்தைகளுக்கு கடவுளின் பெயரை வைக்கலாமா?

ஜோதிடம்: குழந்தைகளுக்கு கடவுளின் பெயரை வைக்கலாமா?

வீட்டில் செய்யக்கூடிய வழக்கமான எளிய உணவை முன்னோர்களுக்கு படைத்து வழிபாடு செய்யலாம். பெண்கள் கணவர் உயிருடன் இருக்கும் பொழுது தாய் தந்தைக்கு அவர்கள் தண்ணீரும் எள்ளும் இறைத்து தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.

சுமங்கலி பெண்கள் விரதத்திற்கு சமைக்கும் போது பட்டினியாக இருந்து சமைக்கவே கூடாது. கணவரை இழந்த பெண்கள் தன்னுடைய கணவருக்காக மட்டுமே விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்கலாம். இறந்த தாய் தந்தைக்காக படையல் போட்டு தானம் செய்து விளக்கேற்றி வழிபாடு செய்யலாமே தவிர அவர்களுக்காக பெண்கள் தர்ப்பணம் செய்யக் கூடாது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US