ஜோதிடம்: குழந்தைகளுக்கு கடவுளின் பெயரை வைக்கலாமா?
இந்த காலகட்டங்களில் எல்லோருக்கும் ஜோதிடம் பற்றிய ஒரு விழிப்புணர்வு வந்திருக்கிறது. அந்த வகையில், குழந்தைகளுக்கு நாம் பெயர் வைக்கின்ற பொழுது நாம் சற்று நிதானமாக யோசித்து தான் பெயர் வைப்போம்.
இருப்பினும் ஒருவருடைய பெயரும் அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய பாதிப்பை உண்டு செய்கிறது என்று சொல்லலாம். அப்படியாக, முருகப்பெருமானுடைய பெயரை குழந்தைகளுக்கு வைக்கலாமா என்பதை பற்றி பார்ப்போம்.
குழந்தைகளுக்கு நேரடியாக கடவுளுடைய பெயர்களை வைப்பதை தவிர்ப்பது நல்லது என்று சொல்கிறார்கள்.
காரணம் வளரும் குழந்தைகள் தெரியாமல் செய்யும் தவறுகள் அல்லது அவர்கள் சந்திக்கக்கூடிய வாழ்க்கை போராட்டங்கள் அந்த பெயரின் உடைய தெய்வத்தை அவமதிப்பது போல் அமைந்து விடலாம்.
மேலும், கோவில்களில் விற்கக்கூடிய பாக்கெட் பால் கொண்டு நாம் முடிந்த அளவிற்கு கடவுளுக்கு அபிஷேகம் செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். தூய பசுவின் பால் அல்லது இளநீர் போன்றவற்றைக் கொண்டே நாம் இறைவழிபாடு செய்வது அவசியம்.
இவ்வாறு பெயர் வைப்பது பற்றியும் இறை வழிபாடு எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றியும் பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர். அதை இந்த காணொளியில் பார்ப்போம்.