நாளைய ராசிபலன் (28-09-2026)
மேஷம்:
இன்று ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். எதிர்பாராத சில செலவுகளை சந்திக்கலாம். மனதில் ஒரு குழப்பமான நிலை உண்டாகும்.
ரிஷபம்:
இன்று தாய்வழி உறவுகளால் ஏற்பட்ட கசப்புகள் விலகும். தாய்மாமின் வழியே உங்களுக்கு ஒரு நெருங்கிய ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வது அவசியம்.
மிதுனம்:
குடும்பத்தினரிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை வைத்துக் கொள்ளாதீர்கள். சுயநலமாக முடிவெடுப்பது வாழ்க்கைக்கு நன்மை தரும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் சிக்கல் விலகும்.
கடகம்:
இன்று பிடித்தவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். குடும்பத்துடன் தொலைதூரப் பயணம் மேற்கொள்வீர்கள். உங்களுடைய பொருட்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம்.
சிம்மம்:
உங்களுடைய வெளிவட்டார செல்வாக்கு உயரும். வாழ்க்கை துணையால் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். நிதானமாக யோசித்து செயல்படுவது அவசியம்.
கன்னி:
குடும்பத்தினரிடம் ஆலோசனையை கேட்டு முக்கியமான முடிவுகளை எடுப்பது நல்லது. வெளி நபர்கள் உடைய தலையிடல்களை தள்ளி வைப்பது அவசியம்.
துலாம்:
இன்று காலை முதல் உங்களுக்கான வேலை பணி அதிகரிக்கும். எதையும் நிதானமாக யோசித்து செயல்படுவது அவசியம். பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.
விருச்சிகம்:
தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். சொத்து தொடர்பான குழப்பங்கள் வந்து செல்லும். சொந்தமாக தொழில் தொடங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
தனுசு:
பிள்ளைகளுக்காக ஒரு சில விஷயங்களை விட்டுக் கொடுத்து செல்வீர்கள். வாழ்க்கை துணை வழியே ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். பிறரின் உண்மை முகம் தெரிந்து கொள்வீர்கள்.
மகரம்:
இன்று நெருங்கியவர்களிடம் தேவையில்லாத கசப்புகள் வரலாம். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். குழந்தைகளுடன் பொழுது போக்கு நேரம் செலவிடுவீர்கள்.
கும்பம்:
வேலைக்காக முயற்சி செய்யக் கூடிய எல்லா காரியமும் வெற்றியில் முடியும். குழந்தைகளுடைய கல்விக்காக சில செலவுகளை செய்வீர்கள். மதியம் மேல் மனதில் உள்ள குழப்பம் விலகும்
மீனம்:
நீண்ட நாட்கள் உங்களை காயப்படுத்திய பிரச்சனை ஒன்று நல்ல முடிவை தரும். பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் ஒரு முக்கிய முடிவு எடுப்பதற்காக நீங்கள் துண்டபடுவீர்கள்.