2026: வெற்றி மேல் வெற்றிகளை குவிக்க போகும் மீன ராசியினர்.. ஜூலை மாதம் பலன்கள்

By Sakthi Raj Jun 27, 2026 06:24 AM GMT
Report

ஜோதிடத்தில் குரு பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற மற்றும் பனிரெண்டாவது வீடான மீன ராசியினர் அறிவிலும் ஆற்றலிலும் மிகச்சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அப்படியாக, அவர்களுக்கு 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

இவர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு தொழில் ரீதியாக மிகச் சிறந்த காலம் ஆக அமையப்போகிறது. 10 குடைய தொழிலாதிபதி உச்சம் பெறுவதால் தொழில் மற்றும் வேலையில் இவர்கள் மிக பிரகாசமாகவும் பிசியாகவும் அதில் வெற்றி பெறக் கூடியவர்களாகவும் வாழ போகிறார்கள்.

மூன்றாம் இடத்தில் இருக்க கூடிய செவ்வாய் பகவான் இருப்பதால்,இந்த மாதம் பெரிய முதலீடுகள் குறிப்பாக நிலம் வாங்குவது புதிய இயந்திரங்கள் வாங்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பணப்புழக்கத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படுவது அவசியம்.

விஜய், ரமேஷ், முருகன் பெயர் கொண்டவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

விஜய், ரமேஷ், முருகன் பெயர் கொண்டவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

ஜூலை 5க்கு பிறகு சுக்கிர பகவான் ஆறாம் இடத்தில் மறைவதால் இவர்களுக்கு விபரீத ராஜயோகம் உண்டாகுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் கடன்கள் அடைப்பதற்கும் ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கும் ஐடி சார்ந்த தொழில்களில் முன்னேற்றம் பெறுவதற்கு அடித்தளமாக அமையப் போகிறது.

இவர்கள் சட்ட ரீதியான சிக்கல்கள் அல்லது வழக்குகளை கொண்டிருந்தால் உங்களுடைய தரப்புகள் வெல்வதற்கும் உங்களுடைய தரப்பு நியாயம் வெற்றி பெறுவதற்கும் அற்புதமான காலகட்டமாகும். நீங்கள் இந்த காலகட்டங்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம்.

புதிய சொத்துக்கள் வாங்கும்பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திங்கட்கிழமைகள் உங்களுக்கு ராசியான நாளாக அமையும். இந்த காலகட்டங்களில் தங்கத்தை அடமானம் வைப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

மேலும், மீன ராசிக்கு இந்த காலகட்டம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.      

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US