2026: சபரிமலை மகரஜோதி சிறப்பு நேரலை- காணாத்தவறாதீர்கள்
கார்த்திகை மற்றும் தை மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் விரதமிருந்து மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று வழிபாடு செய்வார்கள். இந்த மாதங்களில் சபரிமலையில் சில வாரங்கள் தினமும் கோவில் நடை திறந்து விசேஷ பூஜைகள் நடைபெறும். மேலும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி அன்று கோவில் நடை திறக்கப்பட்டது.
மகர சங்கராந்தி என்று சொல்லப்படுகின்ற தை மாத பிறப்பு நாளை ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் தனுசு ராசியில் இருந்து சூரிய பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவார். இதைத்தான் மகர சங்கராந்தி என்று நாம் அழைக்கின்றோம்.
புதன்கிழமை 14ஆம் தேதி மதியம் மூன்று மணியளவில் சூரியன் பெயர்ச்சி நடந்து தை மாதம் அதாவது மகர மாதம் பிறக்கிறது. இதனை அடுத்து சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் வழக்கமாக நடைபெறும் மாதாந்திர பூஜைகளுடன் மகர சங்கராந்தி சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெறும்.
இங்கு நடைபெறக்கூடிய அற்புதமான இந்த பூஜை நிகழ்வுகளை அனைவரும் வீடுகளில் இருந்து கண்டுக்களிக்கும் வகையில் ஐபிசி பக்தி சிறப்பு நேரலை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதை பார்த்து ஐயப்பனுடைய அருள் பெற்று தை திருநாளை நாம் சிறப்பாக கொண்டாடுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |