2026 சனி பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு திருமண யோகத்தை சனி கொடுப்பாராம்

By Sakthi Raj Feb 28, 2026 04:23 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு முக்கிய நிகழ்வாக சனி பெயர்ச்சி நடக்கிறது. இந்த சனி பெயர்ச்சி மார்ச் 6 அன்று காலை 8. 26 மணிக்கு நடக்க உள்ளது. அப்பொழுது, சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். இந்த பெயர்ச்சியால் நிச்சயம் மிகப்பெரிய தாக்கம் உலகளவில், தனிநபர் வாழ்க்கையிலும் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.

இருப்பினும் ஒரு பிரச்சினை வருகிறது என்றால் அதை சமாளிப்பதற்கான ஆற்றலும் நமக்கு பிறக்கும் என்பதில் மாற்றம் இல்லை. மேலும் சனி பகவான் தீமையை மட்டும் செய்ய மாட்டார் நன்மையும் செய்வார்.

அந்த வகையில் இந்த 2026 ஆம்ஆண்டு சனி பெயர்ச்சியில் எந்த ராசியினருக்கு மிகச்சிறந்த நன்மையையும் அவர்கள் வாழ்க்கையில் திருமண வரத்தையும் கொடுக்க இருக்கிறார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

2026 சனி பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு திருமண யோகத்தை சனி கொடுப்பாராம் | 2026 Sani Peyarchi Bring Luck To This Zodiac

மகாபாரதம்: வாழ்க்கையில் வெற்றி பெற அர்ஜுனனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை

மகாபாரதம்: வாழ்க்கையில் வெற்றி பெற அர்ஜுனனிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை

மேஷம்:

மேஷ ராசியினருக்கு இந்த காலகட்டம் அவர்களின் திறமை வெளிப்படும். நீண்ட நாள் கைகளுக்கு வராத பணம் வந்து சேரும். பதிவு உயர்வு இழந்த பொருட்கள் மீண்டும் பெறுதல் போன்ற யோகம் கிடைக்கும்.

இருப்பினும் ஒருவரிடம் பேசும் பொழுது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். பண வரவு அதிகரித்தாலும் செலவு அதிகரிக்கும். குழந்தைகளால் பெருமை சேரும். ஒரு சிலருக்கு பாராட்டுக்கள் அங்கீகாரம் கிடைக்கும். தேவையில்லாத நட்புகளை இந்த காலகட்டங்களில் விட்டுவிடுவது நன்மை தரும்.

ரிஷபம்:

ரிஷப ராசியினருக்கு இந்த காலகட்டமானது பொன்னான காலகட்டம் என்றே சொல்ல வேண்டும். வேலையில் சிறந்த உயரத்தை தொட போகிறீர்கள். மேலும் வேலை ரீதியாக தடைப்பட்ட பணம் உங்கள் கைகளுக்கு வந்து சேரலாம்.

துரோகிகளால் சந்தித்த இழப்புகளை சரி செய்வீர்கள். குடும்பத்திலும் அலுவலகத்திலும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். இருப்பினும் உங்களுக்கு பக்குவப்பட்ட மற்றும் வாழ்க்கையில் அனுபவப்பட்டவர்கள் சொல்லக்கூடிய வார்த்தைகளை அவமதிக்காதீர்கள். ஒருவரைப் பற்றி பின்னால் தவறாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.

2026 சனி பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு திருமண யோகத்தை சனி கொடுப்பாராம் | 2026 Sani Peyarchi Bring Luck To This Zodiac

உங்கள் கனவில் யானை வந்தால் அதிர்ஷ்டம் தேடி வருமா?

உங்கள் கனவில் யானை வந்தால் அதிர்ஷ்டம் தேடி வருமா?

கன்னி:

கன்னி ராசியினருக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு மிகச்சிறந்த பொன்னான காலமாகவே அமைய போகிறது. நீண்ட நாட்கள் திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு கட்டாயம் திருமணம் நடக்கும். நண்பர்கள் மத்தியில் நீங்கள் சமயங்களில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

இருப்பினும் சுப காரிய செலவுக்காக நீங்கள் கடன் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையிடம் மனம் விட்டு பேசுங்கள். கலை மற்றும் படைப்பு துறையில் இருப்பவர்களுக்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்புகள் தேடி வரும். சுறுசுறுப்பாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

மீனம்:

மீன ராசியினருக்கு இந்த காலகட்டம் மிக சிறந்த நன்மை தர போகிறது. அலுவலகத்தில் யாரிடமும் அவசரமாகவும் அலட்சியமாகவும் பேசாதீர்கள். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வில் இருந்த தடை விலகும்.

தேவை இல்லாமல் ஒருவரிடம் நீங்கள் வாழ்க்கையை பற்றி குறை சொல்வதை தவிர்த்து விடுங்கள். சிலருக்கு பெரிய மனிதர்களின் அறிமுகமும் உதவியும் கிடைக்கும். வீடு மனை வாகனம் வாங்கக்கூடிய முயற்சியில் வெற்றிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு திருமண யோகம் கைகூடி வரும். காதல் வாழ்க்கையில் இருந்த கசப்புகள் விலகும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US