நாளை மறுநாள் திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் சனி பெயர்ச்சி விழா
ஜோதிடத்தில் சனிபகவான் மிக முக்கியமான கிரகமாக இருக்கிறார். அதோடு கிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். அப்படியாக சனி பகவானுடைய சனி பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியம் திருநள்ளாறில் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் சனி பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சனி பகவானை வழிபாடு செய்வது உண்டு.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை சனி பெயர்ச்சி நடக்க இருக்கிறது. அன்றைய தினம் காலை 8. 24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பெயர்ச்சி நேரத்தை கணக்கில் கொண்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாரதனை நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த சனி பகவானுடைய அருளை பெறுவார்கள். அந்த வகையில் தேவஸ்தான நிர்வாகம் இலவச தரிசன மற்றும் மூன்று வகையான கட்டண தரிசனத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அதன்படி இலவச தரிசன வரிசை மற்றும் ரூபாய் 300, 600, 1000 ஆயிரம் என கட்டணம் செலுத்தும் வகையில் சிறப்பு தரிசன வரிசை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து டிக்கெட்டுகளும் தேவஸ்தானம் அங்கீகரித்த கவுண்டர்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு அண்டை மாநில போக்குவரத்து துறையினருடன் இணைந்து கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தங்களுடைய வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தவும் தனிப்பட்ட வாகன நிறுத்தம் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பக்தர்களுக்கு உணவு வழங்கும் நோக்கத்துடன் வரிசை ஆரம்பிக்கும் இடங்கள், தரிசனம் முடிந்தபின் பக்தர்கள் வெளியேறும் பகுதிகள், பக்தர்கள் அதிகம் நடந்து செல்லும் வழித்தடங்கள் ஆகியவற்றில் அன்னதான மண்டபங்கள் அமைக்கப்பட்டு இலவச அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அதோடு நளன் குளத்தில் அனைத்து பக்தர்களும் வசதியாக நீராடும் வகையில் குளம் முழுமையாக சீரமைக்கப்பட்டு புதிய நீர் நிரப்பப்பட்டுள்ளது. பெண் பக்தர்களுக்காக தனித்தனியாக ஆடை மாற்றும் இடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஆண்டு சனி பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக ஜோதிடத்தில் பார்க்கப்படுவதால் பக்தர்கள் அனைவரும் திருநள்ளாறு சென்று வழிபாடு செய்ய காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |