2026: கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப் போகும் ராசிகள்.. உங்கள் ராசி உள்ளதா?
ஜோதிட ரீதியாக கிரகங்களுடைய மாறுதல்கள் தான் நம்முடைய வாழ்க்கையில் மாற்றத்தை கொடுக்கிறது. அந்த வகையில் 9 கிரகங்களில் நிழல் கிரகமாகவும் மிகவும் முக்கிய கிரகமாகவும் இருக்கக்கூடிய ராகு மற்றும் கேது பகவான் 12 ராசிகளுக்கும் அவர்கள் இருக்கும் இடத்தை பொறுத்து நேர்மறை மற்றும் எதிர்மறையான தாக்கத்தை கொடுக்கிறார்கள்.
அந்த வகையில் கேது பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் இருக்கிறார். கேது பகவான் மக நட்சத்திரத்தில் மூன்றாம் பாதத்தில் மே 29ஆம் தேதி காலை 10.16 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். பிறகு அவர் அங்கு ஜூலை 30ஆம் தேதி வரை இருக்கிறார். இந்த பெயர்ச்சி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிக பெரிய அளவில் நன்மை கொடுக்க போகிறது. அவர்கள் யாரென்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு கேது பகவானின் இந்த இடமாற்றமானது இவர்களுக்கு சுப பலன்களை கொடுக்க போகிறது. வேலையில் இடமாற்றம் கிடைக்கும். கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். சிலர் குடும்பத்துடன் தொலைதூர பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகக்கூடிய மாணவர்களுக்கு இந்த காலம் மிகச்சிறந்த காலமாக அமைந்து போகிறது. உடல் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து நீங்கள் விடுபட போகிறீர்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு கேது பகவானின் இந்த பெயர்ச்சி இவர்களுக்கு பொருளாதாரத்தில் உயரத்தை கொடுக்கப்போகிறது. தொழில் ரீதியாக கூட்டாளிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபட போகிறீர்கள். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கக் கூடிய வாய்ப்புகள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழுமையான ஆறுதலை கொடுப்பார்கள். உங்களுடைய திட்டங்கள் நிறைவேறக்கூடிய நாள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு கேது பகவானின் இந்த பெயர்ச்சி இவர்களுக்கு லாபகரமான வழியை கொடுக்கப்போகிறது, இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் அதிர்ஷ்டம், செல்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடங்களில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள். பழைய முதலீடுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |